மோடியை தோற்கடிக்க காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் மட்டுமல்...
மோடியை தோற்கடிக்க காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் மட்டுமல்ல - இந்தியாவோடு நெருங்கிய ந...
https://timestamil.in/2013/09/blog-post_16.html
மோடியை தோற்கடிக்க காங்கிரஸ் மற்றும் அதன் தோழமை கட்சிகள் மட்டுமல்ல - இந்தியாவோடு நெருங்கிய நட்புறவு பாராட்டும் நாடுகள் கூட பணத்தை வாரி இறைக்க தயாராக உள்ளதாக தெரிகிறது ..ஏன் ? ஒரு முறை மோடியின் தலைமையில் மத்தியில் பிஜேபி அரசு அமைந்து விட்டால், அதன் பின்னர், எத்துனை ஆண்டுகள் போராடினாலும் பிஜேபி யை ஆட்சியிலிருந்து அகற்ற எந்த கொம்பனாலும் முடியாது - எந்த அந்நிய ஆதிக்க சக்திகளாலும் முடியாது என்பதை தெரிந்து தான், இவர்கள் அனைவருமாக சேர்ந்து மோடியை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். தவிரவும், இங்கே தங்கள் மதத்தை பரப்ப கோடி கோடியாக, கொட்டவும் முடியாது. தங்கள் இஷ்டம் போல் இந்திய பிரதமரையோ, பிற அமைச்சர்களையோ வளைத்து போட்டுக்கொள்ள முடியாது. தங்களின் ஆயுத வியாபாரத்தை இங்கே தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்க முடியாது. பிஜேபி யை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகளின் சிந்தனையும் அது தான். தேர்தலுக்கு முன் ஒரு கூட்டணி - தேர்தலுக்கு பின் ஒரு கூட்டணி, என தங்களின் சுய ரூபத்தை காண்பிக்க தயங்காதவர்கள். இவர்களுக்கு உடம்பில் ஓடுவது இந்திய ரத்தம் அல்ல. தங்களின் சுய நலத்திற்காக எதையும் செய்ய தயங்காதவர்கள். பிஜேபி நம்பி இருப்பதெல்லாம் மக்களின் ஆதரவு ஒன்றை தான். தேசியத்தையும், தேச நலனையும் விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் மோடியை மட்டுமே ஆதரிப்பார்கள். மோடி எதிர்ப்பாளர்கள் என நீங்கள் யாரை சந்தித்தாலும் அவரை ஆராய்ந்து பாருங்கள் - நிச்சயமாக அவர் தேச விரோதியாக தான் இருப்பார் - அல்லது தேசியத்தில் நம்பிக்கை இல்லாதவராக இருக்கலாம். இவ்விரண்டு வகையிலும் சேராதவர்கள் பெரும்பாலும் எழுத்தறிவற்றவர்கள் தான். காங்கிரஸ் இது போன்ற நபர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க தயாராக உள்ளனர். பணத்தை இரைத்தாவது ஓட்டுக்களை போருக்க வேண்டும் என்னும் வெறியில் உள்ளனர். வரும் 2014 ஆம் ஆண்டு தேர்தல் மக்களுக்கு நிச்சயமாக ஒரு அக்கினி பரிட்ச்சை தான்.