கடமை வீரர் காமராஜர்.
https://timestamil.in/2013/09/blog-post_7465.html
கடமை வீரர் காமராஜர்.
உடமை தனக்கு சேர்க்காதவர்
நடத்தை என்றும் சார் பற்றார்
தகமை கண்டு வியந்தார்
ஏழ்மை தனக்கு என்று
எள்ளைக்கூட இலவசம் வேண்டார்
பள்ளிப்பிள்ளைக்கு பாடம் தந்தார்
படிக்காத மேதையாய் வாழ்ந்தார்
ஒற்றை துணியை காயவைத்து
இவர் அமைச்சர் உடன் இருந்தார்
மற்றவர்க்கு மாதிரியாய் வாழ்ந்தார்
இந்த நாட்டின் முதல் மந்திரியாய்
பிறப்பார இவர்போல் இன்று
இருப்பார அவரும் ஆட்ச்சியில்
சிறப்பான நாடு வேண்டும்
புறப்பட்டு தமிழா தமிழனாக
விறைப்போடு உலகம் எங்கும்
உன் ஆட்ச்சியின் குரல் ஓங்கும்
நீதி நூலை கற்றோம்
அதன் வழி சென்றோமா
பாவிகள் ஆள பரதேசிகள் ஆகி
வாவிகள் எல்லாம் மண்மேடாக்கி
தோண்டி அதை விற்று பிழைக்கும்
பிள்ளைக்கும் ஆட்ச்சி சேர்க்கும்
ஒரு கும்பல் கொள்ளை கூட்டம்
இதுவாட தமிழன் ஆட்சி முறை மாற்றம்
ஆறு குணம் அரண் குறளில்
வீறுபோடும் ஆட்ச்சி
சேறு பூசி கயவன் செய்தான்
வள்ளுவனுக்கு சிலையும் வைத்தான்
நாசமற குடி விழ ஆட்ச்சி வேண்டி
ஆடி நாடகம் முடித்தான்
எடா தமிழா இதுவோ மரபு.........