பாஜக தேர்தல் பிரச்சாரக் குழு தலைவர் பதவியில் இருந்து விலக மோடி முடிவு
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், பா...
https://timestamil.in/2013/09/blog-post_14.html
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில்,
பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள மோடி முடிவெடுத்து உள்ளதாகத் தெரிய வருகிறது.
பஜ கட்சிக்குள்ளேயே பல முரண்பாடுகள் எழுந்த நிலையிலும், நேற்று பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டார். இதை அடுத்து அவர் அத்வானியிடம் சென்று ஆசி பெற்றுவிட்டு, குஜராத் திரும்பினார்.
அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, கட்சியை முன்னேற்றவும், கட்சியின் வெற்றிக்கும் பாடுபடுவேன் என்று கூறியுள்ளார். பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழு தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வார் என்றும், இவருக்கு பதிலாக மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும் தெரிய வருகிறது.
இந்நிலையில், ஆர் எஸ் எஸ் கைப்பாவையாக ராஜ்நாத் சிங் செயல்படுகிறார் என்பதை மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தன் மூலம் ராஜ்நாத் சிங் நிரூபித்து உள்ளார் என்று, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் கூறியுள்ளார்.