சோனியா கம்பெனியின் திட்டம் நிறைவேறியது---?
https://timestamil.in/2013/09/blog-post_6756.html
டெல்லி நண்பர்களிடம் இருந்து வந்த வேதனையான செய்தி இது.
“இந்திய அரசும், உளவு நிறுவனங்களும் என்ன நோக்கத்திற்காக ‘மெட்ராஸ் கபே’ படத்தை எடுக்க துணை நின்றார்களோ அது நிறைவேறியிருக்கிறது. விடுதலை வேண்டி போராடிய புலிகளையும், தமிழர்களையும் அப்பட்டமாக ‘குற்றவாளி கூண்டில்’ நிற்கவைத்திருக்கிறது அந்த படம். வட மாநிலங்கள் முழுக்க ஓடியிருக்கிறது...ராஜீவ்கொலை பற்றிய எந்தவித சுழ்ச்சிகளும் தெயிரியாத வட இந்தியர்கள் படத்தை பார்த்து “இப்படித்தான் நடந்தது” என்ற முடிவில் பேச தொடங்கியிருக்கிறார்கள்” என்ற செய்தியை டெல்லி நண்பர் சொன்னபோது வேதனையாயிருந்தது...
ராஜீவ் படுகொலையில் முக்கிய ஆவணமான வீடியோ கேசட்டை மறைத்த எம்.கே. நாராயணன் அன்று மத்திய உளவுத்துறையான ஐ.பி. இயக்குனராக இருந்தார். பின்னாளில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, ஆளுநராக பதவியில் அமர்த்தி அழகுபார்க்கும் ரகசியம்....?
ராஜீவ்கொலை மர்மம் பற்றிய ரகசியங்கள் என்ன ஆனது என தொடர்ந்து நச்சரித்து, கேள்விகேட்டு வந்த அர்ஜுன்சிங்கிற்கு மத்திய மந்திரி பதவி கொடுத்து வாயடைத்த ரகசியம்.....?
அதேபோன்று ராஜீவ்படுகொடில விசாரணை என்ன ஆனது என தொடர்ந்து குரலெழுப்பி மிரட்டிவந்த நாராயணசாமிக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்து வாயை மூடவைத்த ரகசியம்....?
1991- மே காலகட்டத்தில் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து போதிய பாதுகாப்பு தராமல் ராஜீவ்காந்தியின் படுகொலைக்கு துணை நின்ற ஆர்.கே. ராகவனுக்கு பின்னாளில சி.பி.ஐ-யின் இயக்குனர் பதவி, பிறகும் உயர்பதவிகள் கொடுத்துவரும் ரகசியம்.....?
ராஜீவ்கொலை வழக்கு விசாரணையில் இருந்து ’விசாரணை’ நாடகமாடிய டி.ஜி.பி. அமோத்காந்திற்கு ஓய்வுபெற்றவுடன் காங்கிரஸ் கட்சியிலேயே எம்.பி. சீட்டு கொடுத்த ரகசியம்....?
மற்றொரு விசாரணை அதிகாரியாக இருந்த டி.ஐ.ஜி. ஸ்ரீகுமார் என்பவர் முக்கிய ஆகவணங்களோடு லண்டன் சென்று அங்கே ”தொலைந்துவிட்டு” மயிராப்போச்சுன்னு திரும்பி வந்தவருக்கு தண்டணைக்கு பதிலாக, பின்னாளில் மத்திய விஜிலன்ஸ் போர்டு மெம்பர் பதவி கொடுத்த ரகசியம்.....?
தலைமை புலணாய்வு அதிகாரியான கார்த்திகேயனின் மகனுக்கு ஐ.நா.வில் முக்கிய பதவி ‘கிடைத்த’ ரகசியம்.....?
மேலும் இந்த படுகொலை விசாரணையில் இருந்த மற்ற முக்கிய அதிகாரிகளின் மகன்களுக்கும், மகள்களுக்கும் பெங்களுரு நேஷ்ணல் லா அகடாமியில் படிக்க ‘வாய்ப்பு’ கிடைத்த ரகசியம்....?
‘இந்த ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமே சோனியா காந்திதான்’ என்று பித்தகம் போட்ட சுப்ரமணியசாமிக்கு இன்றுவரை இசட்பிரிவு பாதுகாப்பு கொடுத்து திரியவிடும் ரகசியம்.....? எல்லாம் வடநாட்டவனுக்கு தெரியவாபோகிறது. உண்மையான குற்றவாளிகள் எல்லாம் ‘சாமி’களாகவும், மந்திரிகளாகவும், பலம்படைத்த அதிகாரிகளாகவும் வலம்வர, அப்பாவிள் சிக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள்
எல்லாமும் தெரிந்த, அறிந்த தமிழர்கள் நாம் என்ன செய்யப்போகிறோம்.இன்னும் எத்தனை காலத்திற்கு எட்டு திசைகளுக்கு ஒன்றாக திரும்பிக்கொண்டு போராடபோகிறோம்....?
இலங்கையின் தமிழின அழிப்பை நியாப்படுத்துவதற்கு, ராஜபக்சேக்களுக்கு துணைபோக முனைந்த மத்திய காங்-தலைமையிலான அரசு, தமிழர்களின் குரலை மதித்ததா?
காரணம்... காலாகாலத்திற்கும் ஒன்றுபடமாட்டான். சாதி என்ற ஒரு கல்லை தூக்கி வீசினால் காக்கா கூட்டமாக சிதறி ஓடுபவன் தமிழன். ஆளுக்கொரு கட்சி, அமைப்பு என்று தொங்கிக்கொண்டிருப்பவன் தமிழன் என்பதை தெளிவாகவே புரிந்து வைத்துக்கொண்டிருக்கும் சோனியா கும்பலுக்கு நாம் என்ன பதிலை வைத்திருக்கின்றோம்......?