![display9-1622714800](/wp-content/uploads/2021/06/display9-1622714800.jpg)
இந்தியாவில் உள்ள மொழிகளிலே மிகவும் மோசமான மொழி எது என்ற கேள்விக்கு கன்னடம் என கூகுள் வலைத்தளத்தில் வந்ததை தொடர்ந்து கர்நாடகாவில் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இது போன்ற பல பிரச்சனைகளில் ஏற்கனவே கூகுள் சிக்கியது எல்லாருமே அறிந்ததே. இதில் பாரத பிரதமரும் வலைதள தேடலில் தவறாக தெரிவித்ததற்கும் முன்னர் மன்னிப்பு கேட்டுளதும் குறிப்பிடத்தக்கது. இது இணையதள தேடுதலில் தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்டது எனக் கூறி எஸ்கேப் ஆகியது.
![20 years of Google: 20 products that shaped the company - Verdict](https://www.verdict.co.uk/wp-content/uploads/2018/09/shutterstock_1160472559-e1536065238946.jpg)
![20 years of Google: 20 products that shaped the company - Verdict](https://www.verdict.co.uk/wp-content/uploads/2018/09/shutterstock_1160472559-e1536065238946.jpg)
மன்னிப்பு கேட்ட கூகுள் நிறுவனம் :
இந்த செய்தி வெகு விரைவாக கர்நாடகம் முழுவதும் பரவியதை தொடர்ந்து பலரும் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் கூகுள் நிறுவனத்தின் மீது தெரிவித்தனர். எனவே இதை தொடர்ந்து கூகிளும் மன்னிப்பை கேட்டுக்கொண்டது.
Click Here : நடிகர் விஜய்யின் மகனும், விஜய் சேதுபதி மகளும் நடிக்கும் புதிய படமா ?
2500 வருட பழமையான மொழிக்கு கலங்கம் :
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்நாடக பண்பாடு மற்றும் வனத்துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவாலி கூறியது ” கர்நாடக மொழியானது சுமார் 2500 வருடங்கள் பழமையானது எனவும் இது கர்நாடக மக்களுக்கு பெருமைக்குரிய ஒரு விஷயம் எனவும் இப்படிபட்ட பெரும் பழமையை சார்ந்த எங்கள் மொழியை கலங்க படுத்திய கூகுள் நிறுவனத்தை கண்டிப்பதாகவும், அதன் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
![Kannada Language | Kanarese | RitiRiwaz](https://www.ritiriwaz.com/wp-content/uploads/2020/07/Kannada.jpg)
![Kannada Language | Kanarese | RitiRiwaz](https://www.ritiriwaz.com/wp-content/uploads/2020/07/Kannada.jpg)
இனி இந்த தவறுகள் நடக்காது :
இந்த செய்திக்கு பதிலளித்த கூகுள் நிறுவன அதிகாரி கூறுகையில் ” கூகுள் வலைதள தேடுதல் பக்கத்தில் இது போன்ற தவறுகள் எதிர்பாராமல் நடைபெற வாய்ப்புள்ளது எனவும், இந்த தவறுகளை கண்டுபிடித்து சரி செய்யப்படும் எனக் கூறினார். மேலும் கன்னட மொழியை தாய்மொழியாக கொண்ட அணைத்து கன்னட மொழி பேசுபவர்களுக்கு எங்கள் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.
மேலும் இது போன்ற தவறுகள் தவிர்க்க கூகுள் தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil
[…] இந்தியாவிலேயே மிகவும் மோசமான மொழி கன… […]