![AdobeStock_144057616-scaled](/wp-content/uploads/2021/06/AdobeStock_144057616-scaled-1-696x464.jpeg)
முன்பெல்லாம் மனிதர்களின் வாழ்நாள் சராசரியாக 100 வயது வரை இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் சாப்பாடு முறையும் உழைத்த விதமும் தான் என்று பலரும் கூறிவந்தனர். இப்போது மனிதர்களின் சராசரி வாழ்நாள் 60 – 80 வருடங்களாகும். இது நாளடைவில் மெதுவாக குறைந்தே வருகிறது என்று சொல்லலாம்.அது வரும் சந்ததிக்கு 40 – 50 வருடங்களாக குறைந்து வருகிறது.
மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணம்:
இதற்கு பதிலாக தற்போது உள்ள மக்கள் மனிதனின் ஆயுள் கூடியே இருந்தால் மக்கள் தொகை பெருக்கத்தினால் அதிக பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்து வருகின்றனர். இதனால் பல்வேறு வளர்ந்த நாடுகள் செவ்வாய் போன்ற கிரஹங்களில் மக்கள் வாழ முடியுமா என்று ஆராய்ச்சியும் செய்து வருகின்றனர். அதில் சிறிது வெற்றியும் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![Fitness After 60 May Lower Cancer Risk for Older Men, Study Says | Sixty and Me](https://cdn.sixtyandme.com/wp-content/uploads/2015/03/Boomerly.com-Middle-Aged-Men-Now-Have-Another-Reason-to-Get-Fit.jpg)
![Fitness After 60 May Lower Cancer Risk for Older Men, Study Says | Sixty and Me](https://cdn.sixtyandme.com/wp-content/uploads/2015/03/Boomerly.com-Middle-Aged-Men-Now-Have-Another-Reason-to-Get-Fit.jpg)
விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள்:
இந்நிலையில் மக்களின் ஆயுள் நாட்களை நீட்டிக்க சிங்கப்பூர் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பையும் கண்டறிந்துள்ளனர். சிங்கப்பூரில் உள்ள ஜீரோ என்கிற உயிரி தொழில்நுட்ப நிறுவனம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுவருகிறது. அதில் பணியாற்றும் விஞ்ஞானியான டிமோதி பைகர்வ் என்பவர் மனித வாழ்நாளை நீட்டிக்கும் வழியை கண்டுபிடித்துள்ளார். அவரது கண்டுபிடிப்பு பற்றிய தகவல் நேச்சர் கம்யூனிகேஷன் நாளிதழில் வந்துள்ளது.
ஓடியாங்க!! பீர் இலவசமாமே – கிளிக் செய்ங்க பாஸ்
கண்டுபிடிப்பு :
மனிதனின் உடலில் ரத்த அணுக்கள் தான் முக்கிய பணிகளை செய்து வருகிறது. இந்த ரத்த அணுக்கள் தான் மனித வாழ்நாளுக்கு முக்கியமாக உள்ளது. இந்த ரத்த அணுக்கள் இழப்பின் காரணமாகவே மனித வாழ்நாள் குறைகிறது எனக்கூறியுள்ளார். அதில் 35 – 45 வயதுகளில் தான் ரத்த அணுக்கள் இழப்பு ஏற்பட தொடங்குகிறது எனவும் இந்த இழக்கப்படும் ரத்த அணுக்கள் மீண்டும் உற்பத்தியாகாமல் போகும் பச்சத்திலே உயிரிழப்பு நேரிடுகிறது என தெரிவித்தார்.
வாழ்நாள் நீடிக்கும் வழிமுறைகள் :
இவ்வாறு இழக்கப்படும் ரத்த அணுக்கள் மீண்டும் உற்பத்தி செய்ய இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நபரின் ரத்த அணுக்கள் உற்பத்தி இழக்கும் வயது 120 -150 தான் ஆரம்பிக்கும் எனவே அவரது வாழ்நாள் நீட்டிக்க அதிக வயது வரை வாழமுடியும் என தெரிவித்துள்ளார். எனவே மானுடத்தின் வாழ்நாள் நீட்டிக்கும் நம்பிக்கையை சிங்கப்பூர் நாட்டு விஞ்ஞானிகள் விதைத்துள்ளனர்
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil
[…] மனிதர்களால் 150 வயதுவரை வாழமுடியும் –… […]
[…] மனிதர்களால் 150 வயதுவரை வாழமுடியும் –… […]