வாரத்திற்கு 55 மணி நேரம் அதாவது தினமும் 9 மணி நேரத்திற்கு மேல் பணி செய்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் வரும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. WHO மக்களின் உடல்நலம் மற்றும் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவற்றின் மூலம் மக்களுக்கு ஆலோசனை அறிவுரை மற்றும் வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறது.
2016 ம் ஆண்டு ஆய்வு அறிக்கை ஒன்றையே ஆதாரமாக காண்பித்து உள்ளது உலக சுகாதார நிறுவனம். அந்த ஆண்டு கிட்டத்தட்ட 7.45 லட்சம் பேர் அதிக நேரம் பணிபுரிந்ததால் மாரடைப்பு மற்றும் இதய நோய் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
3,98,000 பேர் மாரடைப்பாலும், 3,47,000 இதய நோயாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் அன்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மரணம் அடைந்தவர்களில் 72 % பேர் ஆண்கள் என அந்த அறிக்கை கூறுகிறது. மேற்கு பசிபிக் மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் வசிப்பவர்களில் மட்டுமே இதுபோன்ற வேலைநேர பளுவால் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
60 முதல் 75 வயதினர் பலர் ஒரு வாரத்தில் 55 மணி நேரம் பணிபுரிவதால் இருப்பதாகவும், 45 முதல் 79 வயது வரை உள்ள பலர் வாரத்திற்கு 55 மணிக்கு மேல் பணிபுரிவதால் மரணம் அடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகிறது. வாரத்திற்கு 35 முதல் 40 மணி நேரம் பணிபுரிவர்களிடம் ஒப்பிடும் பொது 55 மணி நேரம் பணிபுரிவர்களுக்கு இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
உலக மக்கள் தொகையில் 9% மக்கள் அதிக நேர வேலைப்பழு என்ற அழுத்தத்தில் சிக்கி தவிப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. கொரோனா தொற்றின் மூலம் வேலை செய்யும் முறையையே மாற்றியுள்ள நாம் அதிக வேலைப்பளு போன்ற சிக்கலுக்கு தீர்வு காண வேண்டுமென உலக சுகாதார இயக்குனர் டெட்ராஸ் அதானம்.