IT ஊழியர்கள் அனைவரும் கடந்த 2020 லாக்டவுன் முதல் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகின்றனர்.
முழு நேர வேலையும், வேலை பணியும் அவர்களுக்கு பெரும் சுமையாக இருந்துவருகிறது. கொரோனா முதல் அலை தொடங்கிய பொது IT நிறுவனங்கள் பெரும் சரிவை கண்டது. எனவே ஆறு மாதத்திற்கு ஒரு முறை சம்பள உயர்வும், பணி உயர்வும் கிடைப்பது வழக்கம். பல கம்பெனியில் கொரோனா இழப்பை காரணம் காட்டி அதை தவிர்த்து வந்தனர். பல ஸ்டார்ட்அப் கம்பெனிகள் இருந்த இடம் தெரியாமல் போனது.
இதனால கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நேரம் பார்க்காமல் உழைத்த ஊழியர்களுக்கு IT நிறுவனத்தால் சம்பள உயர்வு வழங்க முடியவில்லை . இந்நிலையில் வீட்டில் இருந்த படியே வேலைகள் பார்ப்பதால் அது நிறுவனத்திற்கு கரண்டுபில் மற்றும் வாடகை பணம் போன்றவற்றில் லாபம் கிடைக்க ஆரம்பித்தது.
அதே நேரம் IT நிறுவனங்கள் மீண்டும் லாபம் பெற ஆரம்பித்து மீண்டு வந்த நிலையில் A a accenture india IT நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பள உயர்வு மற்றும் பணி உயர்வை அள்ளி வழங்கியது.
இதே போல CTS, TCS மற்றும் பல IT நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் பணி உயர்வுகளை வழங்கி ஊழியர்களை திக்குமுக்காட செய்துள்ளது. இதனை நாட்கள் பட்ட கஷ்டத்திற்கு விடிவுவந்த சந்தோஷத்தில் ஊழியர்களும் இந்த சந்தோசத்தை கொண்டாடி வருகின்றனர் .
IT ஊழியர்கள் காட்டில் மழைதான் போல,