உருமாறிய கொரோனா வகைக்கு புதிய பெயர்களை அறிவித்தது WHO!!

0
22
Facebook
Twitter
WhatsApp
Telegram

உலக சுகாதார அமைப்பு முதல் அலையிலிருந்து உருமாறிய கொரோனாவிற்கு புதிய பெயர்களை அறிவித்துள்ளது. இந்தியாவில் முதலில் கண்டுபிக்கப்பட்ட B.1.617.2 வை டெல்டா கொரோனா வகை என அழைக்கப்படும் என்று அறிவித்துள்ளளது.

உலகில் கொரோனா தொற்றின் தாக்கம் கூடிவரும் நிலையில், பல்வேறு நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உருமாறிய கொரோனா வகை இங்கிலிஷ் லெட்டர்ஸ் மற்றும் எண்கள் வைத்து பேரிடப்பட்டது. அதாவது B.1.1.7, B.1.617 இது போன்று இங்கிலிஷ் லெட்டர்ஸ் மற்றும் எண்கள் வைத்து பெயரிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இப்படி பெயர் இருக்கும் போது இந்த பெயர்களை சொல்லி அழைப்பது கடினம். எனவே இதற்கு மாற்று பெயர்களை வைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரியது.

நாடுகளின் பெயரில் அடையாளப்படுத்துதல்:

Coronavirus new name delta india

எந்த நாடுகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது அதைவைத்து பெயரிடும் பொழுது அதாவது, பிரிட்டன் நாட்டில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட காரோண வைரஸ்க்கு B.1.1.7 வகை வைரஸ் என்றும் B.1.351 கொரோனா வைரஸை சவுத் ஆப்பிரிக்கா கொரோனா வகை என்றும் அழைத்து வந்தனர். இது போல நாடுகளின் பெயரில் வைரஸ் அடையாளப்படுத்தும் போது நாடுகளை களங்கப்படுத்துவது போல் உள்ளதால், இந்த பெயரை மாற்ற வேண்டும் என்று WHO கூறியது.

Read More:சூப்பரா வந்த சீன்ஸ் வெட்டி வெட்டி போட்டுருவாரு: சூர்யா பட இயக்குனர்

டெல்டா கொரோனா வகை:

இதன் அடிப்படையில் கொரோனா வகைகளுக்கு புதிய பெயர்கள் அறிவிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இந்தியாவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்க்கு B.1.617 வகை என்றே அழைக்க வேண்டும். ஆனால் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தலின் படி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் வகைக்கு புதிய பெயரை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது. இதன்படி கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்க்கு டெல்டா கொரோனா வகை என்று பேரிட்டது உலக சுகாதார அமைப்பு. மேலும் சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வகைக்கு பெயர்களையும் அறிவித்தது.

ஆல்பா, பீட்டா, காமா:

who director announced new name

அதன்படி, இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் வகைக்கு “ஆல்பா” கொரோனா வகை என்றும், சவுத் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் வகையை பீட்டா வகை என்றும், பிரேசில் நாட்டில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்க்கு காமா வகை என்றும் அழைக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. மேலும் அமெரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் வகைக்கு எப்சிலோன் கொரோனா வகை என்று பேரிடப்பட்டுள்ளது. இந்த வருடம் ஜனவரி மாதத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் கொரோனா வகைக்கு ‘தீட்டா’ என்று பெயரிட்டுள்ளது.

இது போன்ற பல்வேறு செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – times tamil

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here