கடந்த ஜனவரி மாதம் வாட்ஸ்அப் தனோட privacy policy யை அப்டேட் செய்தது. அதன் மூலம் whatsapp பயன்பட்டர்களின் விவரம் பேஸ்புக்கோடு பகிர்ந்து கொள்ளப்படும் என்று கூறியது. இதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், whatsapp அதற்கு கால அவகாசம் கொடுத்து நீடித்தது.
கடைசி தேதி பெப்ரவரி 8:
பின்னர் பெப்ரவரி 8 தேதிக்குள் பயன்பாட்டாளர்கள் privacy policy ஐ அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறியது. பின்னர் அதை மே 15 தேதி வரை நீடித்தது.
இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள்:
இந்தியாவில் 58 கோடிக்கும் அதிகமான நபர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் கொடுத்த காலகெடு இன்றுடன் முடிவடைகிறது. அனைவரும் புது Privacy policy ஐ அப்டேட் செய்ய வேண்டும் என்று வாட்ஸ்அப் கூறுகிறது.
அப்டேட் பண்ணவில்லை என்றால் என்ன ஆகும்?
Whatsapp privacy policy ஐ அப்டேட் செய்யவில்லை என்றாலும் பழைய வேர்ஷனை தொடர்ந்து பயன்படுத்தும் போது சேவை முழுவதுமாக துண்டிக்கபடாது என்றும், ஆனால் லிமிடட் அக்சஸ் மட்டுமே வழங்கப்படும் என்றும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
- படிப்படியாக சேவை நிறுத்தப்படும்.
- புதிய விதிகளை ஏற்கவிடில் சாட் லிஸ்ட் பயன் படுத்த முடியாது.
- நாளைடைவில் மெசேஜ் அறிவிப்பு நிறுத்தப்படும்.
- பின்னர் ஆடியோ வீடியோ கால்களுக்கு பதில் அளிக்க முடியாது.
- சில நாட்கள் கழித்து மெசேஜ் வருவதே தடைசெய்யப்படும்.
இவ்வாறு வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.