Tamilnadu
தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட தீடீர் மூச்சு திணறல் காரணமாக நந்தப்பாக்கத்தில் உள்ள மியாட் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
நேற்று இரவு உணவு மற்றும் மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு படுத்த விஜயகாந்திற்கு தீடிரென்று அதிகாலை 3 மணி அளவில் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் அவரை அருகிலுள்ள நந்தபாக்கம் மியாட் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை குறித்து காலை 8 மணிக்கு மேல் தான் மருத்துவர்கள் விவரங்களை தருவதாக சொல்லி இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறி இருக்கின்றனர்.