தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வரும் நிலையில் திரைத்திறை மற்றும் சின்னத்திரையில் பல முக்கிய நடிகர்கள் இறப்பு மற்றும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர் .இதில் திரைத்துறையில் எஸ்.பி.ஜனநாதன், தாமிரா, கே.வி.ஆனந்த் போன்றோரும்,காமெடி நடிகர்களில் விவேக், பாண்டூ, நல்ல சிவா போன்றோர் இறப்பு திரைத்துறையையே ஆழ்ந்த வருத்தத்தில் மூழ்க செய்தது.
சின்னத்திரையில் சித்ரா(முல்லை), ஜோக்கர் துளசி, பாரதிகண்ணம வெங்கட் மரணங்களும்,பாண்டியன் ஸ்டோரில் நடித்த நெல்லை சிவா நெஞ்சுவலியில் உயிரழந்தார். அடுத்து அடுத்து நிகழும் பிரபலங்களின் மரணங்கள் மக்களையும், மீடியா துறையுள்ளவர்களையும் திக்குமுக்காட செய்யதது.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தேன்மொழி எம்.ஏ சீரியல் மிகவும் பிரபலமான தொடராகும். இதில் விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த ஜாக்குலின் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு தந்தையாகவும் மற்றும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் நடித்துவந்தவர் “குட்டி ரமேஷ் ” #kuttyramesh அவர் விஜய் டிவி மற்றும் சன் டிவி தொடர்களில் நடித்து பிரபலமானவர். மற்றும் இவர் பல படங்களில் நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவருக்கு சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்ததாகவும் நேற்று நள்ளிரவு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு திரைத்துறை மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். அவர் உயிரிழந்ததாக விஜய் டிவி தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளது .
அவரது ஆன்ம சாந்தி அடைய வேண்டுமென ஆண்டவனை நமது டைம்ஸ் தமிழ் (#timestamil) பக்கத்தின்
சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.