தமிழ் சினிமாவில் விரல்விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களில் டைரக்டர் பாலா என்பவருக்கு தனி இடம் உண்டு. முக்கிய கதாநாயகர்கள் படம் என்றால் பார்க்க செல்லும் ரசிகர்கள் கூட்டம் போல், இயக்குனர் பாலா படம் வெளிவந்தால் அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
டைரக்டர் பாலா எடுத்த தொடக்க படங்களான சேது, பிதாமகன், நந்தா போன்ற படங்கள் பாலாவின் வெற்றி படங்களில் முக்கியமானவைகள். அடுத்து வந்த அவன் இவன் படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சசிகுமார் நடித்து வெளிவந்த தாரை தப்பட்டை படுதோல்வியை சந்தித்தது. அடுத்து வந்த படங்களான நாச்சியார், வர்மா போன்ற படங்களும் தோல்வி படமாகவே அமைந்தது.
இந்நிலையும் அவர் தயாரிப்பில் வெளியான ஜோசப் என்கிற மலையாளப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை படத்தை மக்கள் செல்வன் “விஜய்சேதுபதியை ” வைத்து தானே எடுக்க முடிவு செய்தார் இயக்குனர் பாலா. அதன் பிறகு அந்த படத்தை தயாரிப்பாளரும் , நடிகருமான R.K. சுரேஷை இந்த படத்திற்கு நீ தான் கதாநாயகன், விஜய் சேதுபதி அல்ல என கூறினார் பாலா.
அந்த படத்திற்கு தமிழில் விசித்திரன் என்று பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவேண்டியபடத்தில் R.K.சுரேஷ் நடித்தால் படம் எப்படி இருக்கும் என ரசிகர்களும் படத்துக்காக காத்திருக்கின்