வாங்க வந்து போட்டுக்கோங்க பீர் இலவசமா வாங்கிக்கோங்க

1
49
Facebook
Twitter
WhatsApp
Telegram

கொரோனா தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. அனைத்து நாடுகளும் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அநேக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் அமெரிக்கா அரசாங்கம் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு பீர் ஒன்றை இலவசமாக தருவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்கா அரசாங்கம்:

அமெரிக்கா தேசத்தில் இதுவரை 34,154,305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 611,020 பேர் இறந்துள்ளனர். 27,986,511 பேர் குணமாகி உள்ளனர். இந்நிலையில் முழுவதுமாக நாட்டிலிருந்தே கொரோனவை அழிக்க தடுப்பூசியை தவிர வேறு வழியில்லை. இதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் அந்த நாட்டின் ப்ரெசிடெண்ட் ஜோ பைடேன் தெரிவித்துள்ளார். இதுவரை 12 வயது முதல் 18 வயது வரைக்கும் 60% தடுப்பூசி போடபட்டுள்ளது. 18 வயது முதல் 64 வயது வரைக்கும் 65% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேல் 90% மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Must Read: அட்ராசக்க மூன்று அதிரடி திட்டம் – தமிழக அரசு அறிவிப்பு

தடுப்பூசி:

vaccination

கடந்த ஆண்டு ஏப்ரலில் 20 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை ஒவ்வொருநாளும் 8 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தற்போது அது 6 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்த மக்கள் தொகையில் 62% மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இன்டீபென்டென்ஸ் டே:

வருகிற ஜூலை மாதம் 4 தேதி அமெரிக்கா தேசத்தின் சுதந்திர தினம். அதற்குள் 70% மக்களுக்கு அதாவது 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவேண்டும் என்ற முனைப்பில் செய்யப்பட்டு வருகிறார் அதிபர் ஜோ பைடேன்.

Must Read: 1st டெஸ்ட்: ENG VS NZ – அறிமுக போட்டியில் கான்வே அசத்தல் சதம்!!

பீர் பாட்டில் இலவசம்:

vaccination

எல்லாரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன் வர வேண்டும் என்று அரசு சில சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும் நிறுவனங்களும் தங்களுடைய பணியாளர்களுக்கு சில சலுகைகளும் அறிவித்துள்ளது. சம்பளத்துடன் கூடிய விடுமுறை, கிபிட் வவுச்சர் மற்றும் விளையாட்டுகளுக்கு அனுமதி போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா அரசாங்கம் தடுப்பூசி போடு கொள்பவர்களுக்கு பீர் பாட்டில் இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகிற ஜூலை 4ம் தேதிக்குள் 13 கோடியே 36 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட வேண்டும் என்ற ஜோ பைடேன் இலட்சியத்தை நிறைவேற்ற ஆயுஷுசேர் புஷ் நிறுவனம் இந்த அறிவிப்பை அளித்துள்ளது.

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here