உப்பேனா என்னும் தெலுங்கு படத்தை புச்சிபாபு சனா இயக்கத்தில் நடிகர்கள் வைஷ்ணவ் தேஜ், க்ரித்தி ஷெட்டி படம் பிப்ரவரி 12ம் தேதி தியேட்டர்களில் வெளியாகி மக்களிடையே ஏகமான வரவேற்பை பெற்றது. இந்த படம் 22 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது இது 100 கோடி வசூலுடன் பெரும் லாபத்தை ஈட்டியது.
உப்பேனா படம் தமிழில் ரீமேக் :
இந்த உப்பேனா படத்தில் கதாநாயகியாக நடித்த க்ரித்தி ஷெட்டியின் அப்பாவாகவும், அதில் வில்லனாகவும் நடித்த விஜய் சேதுபதி தெலுங்கு ரசிகர்களை மிரட்டி எடுத்திருக்கிறார் என புகழ்ந்து தள்ளுகிறது தெலுங்கு சினிமா வட்டம். ஏற்கனவே இளைய தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி கேரக்டர் படத்தின் கதாநாயகனான விஜயை விட பேசப்பட்டது. அதே முத்திரையை உப்பேனா படத்தில் நிலை நிறுத்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.
விஜய்யிடம் கேட்ட விஜய் சேதுபதி :
உப்பேனா படத்தில் தமிழ் ரீமேக் உரிமத்தை விஜய் சேதுபதி வாங்கியுள்ளார் எனவும், அந்த படத்திற்கு இளைய தளபதி ,மகன் ஜேசன் சஞ்சய் கதாநாயகனவும், உப்பேனா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த க்ரித்தி ஷெட்டியே கதாநாயகியாக நடிக இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது விஜயிடம் இதை பற்றி கேட்டதாகவும்,அதற்கு நம்ம விஜய் அவர்களும் ஓகே கூறியதாகவும் கூறப்படுகிறது.
இயக்குனராகும் விஜய்யின் மகன் :
ஆனால் இளைய தளபதியின் மகனுக்கோ கேமரா முன் நிற்க விருப்பம் இல்லையாம், கேமராவுக்கு பின் இயக்குனராக நிற்க தான் விருப்பமாம். அதிலும் அந்த ஹீரோயினுக்கோ 3 படங்கள் கையில் உள்ளதாம். எனவே இந்த தகவல் தவறானது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அதிலும் விஜயின் மகனுக்கு அவர் தந்தையை வைத்து படம் இயக்க ஆசையாம் அதையும் பெரிய டைரக்டருக்கு உதவி இயக்குனராக இருந்து பின் விஜயை வைத்து இயக்க போவதாக கூறிவருகிறாராம். ஆனால் ரசிகர்களுக்கோ விஜய் மகன் ஹீரோவாக வருவதே விருப்பமாக உள்ளது. அதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும் .
Must Click: 1st Test: ENG vs NZ – கான்வே இரட்டை சதம், அணியை காப்பாற்றிய ரூட், பர்ன்ஸ் !!
நோ சொன்ன நடிகை க்ரித்திக் ஷெட்டி :
தற்போது தனுஷ், பாலாஜி மோகன் கூட்டணியில் வரவிருக்கும் படத்தில் க்ரித்திக் ஷெட்டி ஹீரோயினாக நடிப்பதாக வந்த தகவலையும் அவர் மறுத்துள்ளார். தன்னிடம் 3 தெலுங்கு படம் இருப்பதாகவும் புதிய வாய்ப்புகள் வந்தால் என்னுடைய சமூக வலைதள பக்கம் மூலம் தெரிவிப்பேன் என கூறி இந்த தகவலுக்கு முழுக்கு போட்டுள்ளார்.
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil
[…] […]