தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வெற்றி பெற்று முக.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆனார். சேப்பாக்கம் எம்.எல்.ஏ, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் சேப்பாக்கம், திருவல்லக்கேணி தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.எனினும் அனுபவத்தை முன்னிட்டு உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆவடி தொகுதி நாசர் ( பால்வளத் துறை அமைச்சர்) அவர்கள் அத்தொகுதியில் புதிய சட்டமன்ற அலுவலகத்தை திறக்க உதயநிதி அவர்களை அழைத்துள்ளார். எனவே இதற்கு செல்ல தயாரக இருந்தார் உதயநிதி அவர்கள்.
இதையறிந்து முக.ஸ்டாலின் அவர்கள் சட்டம் அனைவர்க்கும் பொது தான்!!. எனவே பொது மக்களுக்கு எப்படி சுப நிகழ்ச்சிகள், விழாக்கள் நடத்த தடையோ, அதுதான் கட்சிக்கும், உதயநிதிக்கு பொருந்தும் என கூறி அவ்விழாவிற்கும், உதயநிதி அங்கே செல்ல தடை விதித்தார். இது மக்கள் மத்தியில் பெருமையாக பேசப்படுகிறது.
timestamil.in