தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய 2018 ஆம் ஆண்டு நடத்திய மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முறையாக நடத்தவில்லை மற்றும் குழப்பங்கள் உள்ளதாகவும் தற்போது ஆட்சி மாற்றம் பெற்ற அரசிடம் மறுதேர்வு நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தேர்வில் முறைகேடு:
டி.என்.பி.எஸ் 2018 ஆண்டில் மோட்டார்வாகன ஆய்வாளர் 2ம் கிரேடு தேர்வை நடத்தியது. ஜூன் 6 ஆம் தேதி நடந்த தேர்வுக்கு ஜூலை 15ஆம் தேதி 33 பேர் தேர்வாகியுள்ளதாக அறிவித்தனர். அறிக்கையில் 1,328 பேர் எழுதிய அத்தேர்வில் 33 தேர்ச்சி என அறிவித்தனர். இந்நிலையில் சமூக ஆர்வலர் காசிமாயன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வாங்கிய அறிக்கையில் 1,392 பேர் எழுதியதாக வந்தது. எனவே இதில் குழப்பங்கள் உள்ளதாக சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அப்போது tnpsc குடுத்த அறிக்கையில் அந்த தேர்வை 1298 பேர் எழுதியதாக சமர்ப்பிக்கப்பட்டது. எழுதியவர்களின் எண்ணிக்கையில் குழப்பம் இருப்பதால் அந்த 33 தேர்ச்சியை ரத்து செய்வதாகவும் தீர்ப்பை அறிவித்தது. எனவே டி.என்.பி.எஸ் 226 பேரை தேர்வு செய்து அவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பை ஜூன் 8 முதல் 11 வரை பார்க்கப்படும் என அறிவித்தது.
முன்னர் தேர்ச்சி செய்யப்பட்ட அந்த 33 பேரில் 6 பேர் இந்த 226 தேர்வுசெய்யப்பட்டவர்களில் உள்ளதாக தகவல் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியது. எனவே இந்த குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் உடனே தண்டிக்கப்பட வேண்டும் எனவும், மீண்டும் இந்த தேர்வை நடத்த வேண்டும் என தமிழ் நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.