![dc-Cover-leq0708g93ee2egorpdai1l7r6-20160427155139.Medi](/wp-content/uploads/2021/06/dc-Cover-leq0708g93ee2egorpdai1l7r6-20160427155139.Medi_-696x390.jpeg)
கொரோனா இரண்டாம் அலை உலகம் எங்கும் தனது வீரியத்தால் பல கோடி மக்களை பாதித்தும், பல லட்ச உயிர்களை பறித்து சென்று கொண்டுருக்கிறது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போதும் போல் இயங்காமல் ஆன்லைனில் வகுப்புகள் கடந்த வருடத்தில் இருந்து நடந்து வருகிறது. கல்லூரிகளில் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. பள்ளிகளில் சிறிய வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வுகள் மத்திய, மாநில அரசுகளால் ரத்து செய்யப்பட்டது
பள்ளி தேர்வுகளில் முக்கிய தேர்வுகளாக கருதப்படும் 10,12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கொரோனா பாதிப்பின் மற்றும் மாணவர்கள் நலன் கருத்தி ஒத்தி வைக்கப்பட்டன. இதில் மாநில மற்றும் மத்திய பள்ளி கல்வியான சிபிஎஸ்இ தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. பல மாநிலங்களின் அறிவுரையையும் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் கல்வி துறை நிர்வாக அதிகாரிகளோடு கலந்தாலோசித்து தமிழ்நாடு பிளஸ் 2 பொது தேர்வுகளை தள்ளிவைத்தார். தமிழ்நாடு மட்டுமின்றி பல மாநில அரசுகளும் அவர்கள் மாநில பொதுத்தேர்வை ஒத்தி வைத்தன.
![CBSE Class 12 board exams PM Modi crucial meeting cancellation demand discussion options proposals latest news | Education News – India TV](https://resize.indiatvnews.com/en/resize/newbucket/715_-/2021/06/modi-1622554655.jpg)
![CBSE Class 12 board exams PM Modi crucial meeting cancellation demand discussion options proposals latest news | Education News – India TV](https://resize.indiatvnews.com/en/resize/newbucket/715_-/2021/06/modi-1622554655.jpg)
இந்நிலையில் நேற்று இந்தியா பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொது தேர்வுகளை இந்த கொரோனா இரண்டாம் அலை போன்ற கடினநேரத்தில் நடத்தலாமா? என மத்திய கல்வித்துறை அதிகாரிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்தினர். கொரோனா காலத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதும் பட்சத்தில் அவர்கள் கொரோனாவால் பாதிக்க படும் அபாயம் இன்னும் அதிகமாகி உள்ளதாகவும். ஆன்லைனில் தேர்வு வைத்தால் வெளிப்படையான உண்மைத்தன்மையுடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
எனவே பிரதமர் மோடி அவர்கள் நேற்று மத்திய கல்வியான சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தெரிவித்தார். பொதுத்தேர்வை காட்டிலும் மாணவர்களின் உடல்நலனே முக்கியம். எனவே அவர்களது நலனுக்காக சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்வதாக தெரிவித்தார். சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் அனைத்து மாநிலங்களிலும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு முன் தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வை நடத்துவதை மத்திய அரசு சிபிஎஸ்இ பிளஸ் 2 பொது தேர்வை நடத்துவதை பொறுத்து தமிழ்நாட்டில் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
![anbil mahesh poyyamozhi: உதயநிதி ஃப்ரண்டுன்னா சும்மாவா? -அன்பில் மகேஷுக்கு ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி! - anbil mahesh poyyamozhi who is a close friend of udhayanidhi stalin ...](https://static.langimg.com/thumb/msid-82452455,imgsize-23654,width-540,height-405,resizemode-75/samayam-tamil.jpg)
![anbil mahesh poyyamozhi: உதயநிதி ஃப்ரண்டுன்னா சும்மாவா? -அன்பில் மகேஷுக்கு ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி! - anbil mahesh poyyamozhi who is a close friend of udhayanidhi stalin ...](https://static.langimg.com/thumb/msid-82452455,imgsize-23654,width-540,height-405,resizemode-75/samayam-tamil.jpg)
இந்நிலையில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பிரதமர் மோடி அவர்கள் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ததை தொடர்ந்து இன்று தமிழ்நாடு பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்தலாமா? கூடாதா? என்று கேட்டறிய இன்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார். எனவே தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? இல்லை ரத்தகுமா? என இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவிப்பார் என தகவல்கள் வந்துள்ளன. மேலும் இது போன்ற தகவல்களுக்கு timestamil பாருங்கள்
[…] […]