Big Breaking: TET தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் – மத்திய அரசு அறிவிப்பு

0
34
Facebook
Twitter
WhatsApp
Telegram

தமிழகத்தில் நடைபெறும் TET தேர்வு எழுதி அதன் சான்றிதழ் வைத்திருப்போர் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெறலாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு:

TNTET

2012ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதி தேர்வின் மூலம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பட்டு வந்தது. ஒருவர் அந்த தேர்வு எழுதி அரசு நிர்ணயிக்கும் மதிப்பெண்ணை பெரும் பொழுது அரசு அவர்களுக்கு சான்றிதழை வழங்கும். அது பணி நியமன ஆணை கிடையாது. அவை தகுதி தேர்வு சான்றிதழ். அதை வைத்து அரசு பள்ளிகளிலோ அல்லது தனியார் பள்ளிகளில் தகுதி தேர்வின் அடிப்படையில் பணி அமர்த்தப்படும் பொழுது அதை வைத்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

Must Read: ஆசிரியர் தேர்வு ஆணையம் கலைப்பு? ஓபிஎஸ் கண்டனம்!!

7 ஆண்டுகள் மட்டுமே செல்லும்:

இந்த தகுதி தேர்வு சான்றிதழ் ஒருவர் பெரும் பொழுது அதை அவர் 7 வருடங்கள் மட்டுமே அதை வைத்து பணிக்கு சேர முடியும். அதாவது அரசு பள்ளிகளிலோ தனியார் பள்ளிகளிலோ வேலைவாய்ப்பை வெளியிடும் பொது இந்த சான்றிதழ் உள்ள நபர் 7 வருடங்கள் வரை இந்த சான்றிதழை வைத்து விண்ணப்பம் செய்யலாம். அதன் பின் அவை செல்லுபடியாகாது. மீதும் அந்த நபர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வேண்டும்.

நீண்டநாள் கோரிக்கை:

PM Modi

ஆசிரியர்களிடமிருந்து நீண்டநாட்களாக இந்த கோரிக்கை வைக்கப்பட்டது. 7 வருடங்கள் என்பதை வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தற்போது மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. வயது சென்றவர்களுக்கு இந்த சலுகை உபயோகமாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் மறுபடியும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது ரொம்ப கடினமான காரியம்.

மறுபடியும் தேர்வு எழுதலாம்:

Tamil Nadu teachers

இந்த சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடி ஆகும் என்றாலும், பள்ளிகளில் வேலைவாய்ப்பை அறிவிக்கும் போது அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை வழங்கப்படும். ஒருவேளை அரசாங்கம் நிர்ணயித்த மதிப்பெண்ணை நீங்கள் பெற்றிந்தாலும் உங்களை விட அதிக மதிப்பெண் எடுத்தவர்க்கு தான் வேலை கிடைக்கும். எனவே ஒருவர் தான் எடுத்த மதிப்பெண் குறைவு என்று என்னும் போது அவர் மறுபடியும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதலாம். ஒருவேளை மறுமுறை எழுதும் போது அதிக மதிப்பெண் பெற்றால் அதை வைத்து வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள்Times Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here