கடந்த ஜனவரி மாதத்திலிருந்து whastapp ஐ தரவிறக்கம் செய்பவர்கள் வெகுவாக குறைந்துள்ளனர். அதற்கு காரணம் ஜனவரி மாதத்தில் அவர்கள் வெளியிட்ட புது Privacy policy தான். இதனால் WhatsApp ல் இருந்து பயனாளர்கள் வேறு சோஷியல் மெசேஜ்ஜிங் ஆப்பை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
Telegram and signal:
குறிப்பாக Telegram மற்றும் signal ஆப்பை அதிகளவில் ஜனவரி 2021 க்கு பிறகு தரவிறக்கம் செய்துள்ளனர் என்று sensor tower store என்ற டேட்டா கலெக்சன் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த நான்கு மாதத்தில் whatsapp ஐ தரவிறக்கம் செய்தவர்கள் உலகம் முழுவதும் 43% YOY(Year Over Year)குறைத்துள்ளது என்று sensor tower கூறுகிறது. இருந்தாலும் அதிகளவில் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் whatsapp 172.3 மில்லியனுடன் முதல் இடத்தில் உள்ளது.
ஆனால் இதே கட்டத்தில் telegram ஆப்பை தரவிறக்கம் செய்வது 98 % yoy உயர்ந்ததுள்ளது. அதேவேளையில் signal ஆப்பின் உலக தரவிறக்கம் 1192 % மாக உயர்ந்துள்ளது. Telegram ஆப்பின் மொத்த தரவிறக்கம் 161 மில்லியன். Signal ஆப்பின் மொத்த தரவிறக்கம் 64.6 மில்லியன் ஆகும்.