தமிழகத்தில் ஓராண்டாக பள்ளிகள் இயங்காத நிலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பாதி ஊதியம் மட்டுமே வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், அதற்கான பதிலை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,” என்னுடைய வாட்ஸாப்க்கு ஆசிரியர்களின் ஊதியத்தை குறைத்து அதை இப்பொழுது கொரோனா காலத்தில் பணிசெய்யும் முன்கள பணியார்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வந்த வண்ணம் உள்ளது. இது முறித்து முதலவர் ஸ்டாலினுடன் ஆலோசித்து, அதை எப்படி செய்வது என்று முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் எவையும் செயல்படவில்லை. அவ்வப்போது ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றாலும் பெரும்பாலும் வீட்டிலேயே தான் இருந்தனர். ஓராண்டாக பள்ளிகள் இல்லாத நிலையில் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை பாதியாக குறைத்து வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் அமைச்சர் அது குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.