![TN-TRB-Recruitment-2018](/wp-content/uploads/2021/06/TN-TRB-Recruitment-2018-696x364.png)
ஆசிரியர் தேர்வு ஆணையம் கலைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்துடன் இணைக்கப்பட போகிறது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இதற்கு அதிமுக பொது செயலாளர் ஓபிஎஸ் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் தேர்வு ஆணையம்:
1987ம் ஆண்டு அரசுப்பள்ளிகள், அரசு கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் போன்ற கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்கும் நோக்கில் ஆசிரியர் தேர்வு ஆணையம் தோற்றுவிக்கப்பட்டது. இதை அன்றைய முதல்வராக இருந்த புரட்சி தலைவர் கொண்டுவந்தார். இதன் மூலம் பல லட்சம் ஆசியர்களை இந்த தேர்வு ஆணையத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் அநேக மாணவ மாணவியர்கள் பயன்பெற்றனர். ஆசிரியராக வேண்டும் என்று கனவு கண்டவர்கள் இந்த வாரியத்தின் மூலமாக பயன் அடைந்தனர். மேலும் இது எளிதாக வேலைவாய்ப்புகளை பெறவும் அதிலுள்ள குறைகளை கலையவும் உதவியது. மேலும் தற்போது அந்த வாரியத்தின் மூலமாக ஆசிரியர்கள் தேர்வு வைத்து அதிலிருந்து தேர்ந்து எடுக்க படுகின்றனர்.
Must Read: மனிதர்களால் 150 வயதுவரை வாழமுடியும் – விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு
ஆசிரியர் தேர்வு ஆணையம் கலைப்பு:
![Teachers recruitment board](https://images.hindustantimes.com/rf/image_size_630x354/HT/p2/2020/01/24/Pictures/_63b51e38-3e4d-11ea-ae56-f909945546d5.png)
![Teachers recruitment board](https://images.hindustantimes.com/rf/image_size_630x354/HT/p2/2020/01/24/Pictures/_63b51e38-3e4d-11ea-ae56-f909945546d5.png)
தற்போது போது பதியேற்ற அரசு சில காரணங்களை காட்டி ஆசிரியர் தேர்வு ஆணையத்தை களைத்து அதை தமிழ்நாடு அரசு பணியாளர் அமைப்போடு இணைப்பது பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். மேலும் அவர் கூறும் போது இதேபோல் தான் 1981ம் ஆண்டு புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில் காவலர்களுக்கென்று குடியுப்புக்களை கட்டித்தர காவலர் வீடு வசதி வாரியம் என்ற ஒன்றை ஏற்படுத்தினார். இதன் மூலம் காவலர்களுக்கு எளிதாகவும் சீக்கிரமாகவும் குடியுப்புக்களை கட்டி தர முடிந்தது.
பின்னர் 1989ல் பதவியேற்ற திமுக அரசு காவலர் வீடு வசதி வாரியத்தை களைத்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துடன் சேர்க்கப்பட்டது. இதன் விளைவாக காவலர்களுக்கு சரியான குடியிருப்புகளை கட்டி தர முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு 1991ம் ஆண்டு செல்வி ஜெயலலிதா பதியேற்றபின் மறுபடியும் காவலர்களுக்கென்று காவலர் வீடு வசதி வாரியம் ஏற்படுத்தினார்.
கலைக்கக்கூடாது:
![Teachers recruitment board](https://images.newindianexpress.com/uploads/user/imagelibrary/2020/2/15/w1200X800/MK_Stalin_PTI.jpg)
![Teachers recruitment board](https://images.newindianexpress.com/uploads/user/imagelibrary/2020/2/15/w1200X800/MK_Stalin_PTI.jpg)
எனவே இதை கருத்தில் கொண்டு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புள்ள ஆசிரியர் தேர்வு ஆணையம் மூலம் நிரப்ப வேண்டும் என்றும். இதை கலைக்க கூடாது என்றும்,இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். ஆசிரியர்களுக்கு சரியாக வேலைவாய்ப்பு சென்று சேராது என்றும் அறிக்கையில் தெரிவித்தார்.
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil
[…] […]