தமிழ்நாட்டில் கடந்த 10 தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இது மே 24 தேதி வரை தொடரும். இந்த காலகட்டத்தில் அரசுக்கு 2900 கோடி வருமான இழப்பு நேரிடும் என்று கருதப்படுகிறது. இதனால் ஊரடங்கு முடிந்த பின் மதுபானங்களின் விலை உயர்த்த போவதாக ஒருதகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அரசுக்கு வருவாய் இழப்பு:
தமிழகத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கில் டாஸ்மாக் திறக்கப்படவில்லை. அதன் மூலம் வரும் 2020 கோடி வருமானம் தடைப்பட்டு இருக்கிறது. மேலும் பத்திர பதிவின் மூலம் வரும் 500 கோடி ரூபாயும் பெட்ரோல் டீசல் வரி வருவாய் மூலம் வரும் 386 கோடி ரூபாயும் முடங்கியுள்ளது. ஊரடங்கு காலத்தில் 75 % விற்பனை குறைந்துள்ளதாக பெட்ரோல் விறபனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் மூலம் அதிக வருமானம்:
இந்நிலையில் அரசுக்கு அதிக வருமானம் வந்து கொண்டிருக்கிறது. எனவே மதுபானங்களின் விலையை உயர்த்துவதன் மூலம் ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்புகளை சரி செய்ய முடியும். எனவே ஊரடங்கு தளர்வுக்கு பின் மதுபானங்களின் விலையை உயரும் என்று கருதுகின்றனர்.
குடிமகன்களின் நிலை:
ஏற்கனவே தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை அதிகமாக இருந்தாலும் டாஸ்மாக்கில் குறைந்த பாடில்லை. நாளுக்குநாள் டாஸ்மாக் விற்பனை உயர்ந்து கொண்டேதான் செல்கிறது. ஒருவேளை மதுபானங்களின் விலை உயரும் பட்சத்தில் அரசை திட்டிக்கொண்டே மதுபானத்தை வாங்கி குடிக்கத்தான் போகிறார்கள்.