செய்திகள் பொழுதுபோக்கு
தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் குறையாத பட்சத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Lockdown:
ஏற்கனவே கடந்த 10 தேதியில் இருந்து தமிழகத்தில் ஊரடங்கு பின்பற்றபட்டு வருகிறது. அது வருகிற 24 தேதி முடியும் தருவாயில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு தமிழக அரசு அதிகரித்து உள்ளது.
எவை எவை இயங்கும்:
நாளை மட்டும் தளர்வுகள் வழங்கப்படும் என்றும், இன்று இரவு 9 மணி வரையும் நாளை காலை 9 மணி முதல் 6 மணி வரை அணைத்து கடைகளும் திறந்து இருக்க அனுமதி அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
- மருந்து கடைகள் மற்றும் பால் இவற்றிக்கு அனுமதி உண்டு.
- மேலும் மக்களுக்கு வேண்டிய காய்கறிகளை தமிழக அரசே தோட்டக்கலையின் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வழங்கப்படும்.
- உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரையும் மலை 6 மணி முதல் 9 மணி வரையும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- Zomoto மற்றும் Swiggy போன்றவற்றிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- சரக்கு வாகனங்கள் செல்ல மற்றும் அத்தியாவச வண்டிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தளர்வுகளற்ற ஊரடங்கு தமிழகத்திற்கு தேவையான ஒன்றே என்று இன்று நடைபெற்ற அணைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.