தமிழ்நாட்டில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் மக்கள் அதைக்கண்டு அஞ்சுவதாக தெரியவில்லை. மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன, ஆக்ஸிஜன் இல்லை, தடுப்பூசி இல்லை என்ற செய்தியை கேட்டாலும் மக்கள் வீட்டில் இருப்பதே இல்லை. ஊரடங்கு அமலில் இருந்தாலும் வெளியில் சுற்றிய வண்ணம் தான் உள்ளனர். காய்கறி கடைக்கும் கரி கடைக்கும் சென்று கொண்டுதான் உள்ளனர்.
திருச்சியில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நேற்று 1500 அதிகமான பேர் தொற்றுக்கு ஆளாகினர். இன்று காலையில் 10 மணிக்கெல்லாம் அணைத்து கடைகளும் மூடப்பட்டுவிடும் என்று எண்ணி மக்கள் கூட்டம் மார்க்கெட்டில் அலைமோதியது. ஒரே இடத்தில அதிக மக்கள் கூடுவது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லா கடைகளிலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க கட்டங்கள் இருந்தாலும் மக்கள் அதையெல்லாம் பின்பற்றாமல் காய்கறி வாங்குவதற்கும் கறி வாங்குவதற்கும் கூட்டம் கூடுகின்றனர்.
இதேபோல் தான் அணைத்து மாவட்டத்திலும் எல்லா இடத்திலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது . காய்கறியோடு கொரோனவையும் சேர்த்து வாங்குகின்றனர். என்று தான் இந்த மக்கள் திருந்துவார்களோ…