நாசாவின் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் கலக்கும் கோவை பொண்ணு!!

Covai Subashini Iyer Working For Nasa Plan Of Mens Go To Moon Details In Tamil

1
23
Facebook
Twitter
WhatsApp
Telegram

நிலவுக்கு மனிதர்களுடன் செல்லக்கூடிய விண்கலம் அனுப்பும் முயற்சியில் நம்ம கோவையை சேர்ந்த பொண்ணு கலக்கிட்டு இருக்காம். இந்த நாசாவின் லட்சிய திட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சுபாஷினி ஐயர் என்பவர் மிகவும் முக்கிய இடத்தில் இருந்து பணியாற்றிக்கிட்டு வருகிறாராம்.

நாசாவில் கோவை பொண்ணு :

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையம் அதாவது நாசா அங்கே மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் ரொம்ப தீவிரமா நடந்து கிட்டு இருக்காம். அந்த திட்டத்திற்கு “ஆர்ட்டெமிஸ்” என்று பெரியரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நாசாவின் லட்சிய திட்டத்தில் நம்ம தமிழ் நாட்டை சேர்ந்த கோவையில் வசிக்கும் சுபாஷினி ஐயர் இருப்பது நம்ம தமிழ்நாட்டிற்கே பெருமை தானே மக்களே.
இந்த சுபாஷினி ஐயர் கோவையில் பிறந்து, அங்குள்ள விஎல்பி இன்ஜினியரிங் காலேஜில் 1992 ஆம் வருடம் மெக்கானிக்கல் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர். Click Here Boss: பிகினி உடைகளில் கர்நாடக அரசின் கொடி : அமேசான் செய்த வேலை

NASA: Indian-origin women are working on an important project of NASA, the American agency for research on space. | भारतीय वैज्ञानिक सुभाषिनी अय्यर करेंगी मदद, तब NASA चांद पर इंसानों को ...

நாசாவில் குழுவின் தலைமை பொறுப்பு :

சுபாஷினி ஐயர் 2 வருடங்களாக நாசா ஆராய்ச்சி மையத்தில் பணியை மேற்கொண்டு வருகிறார். நிலவிற்கு அனுப்பப்படும் விண்கலத்தின் மிக முக்கியமான பாகங்களை ஒருங்கிணைக்கும் முக்கிய பணியில் உள்ளார். அந்த குழுவின் தலைமை பொறுப்பில் உள்ளார் என்பது நம் தமிழர்களுக்கு பெருமையாக கருதபடுகிறது.

மனிதனை நிலவுக்கு அனுப்பும் திட்டம் :

இது தொடர்பாக சுபாஷினி ஐயர் அவர்கள் கூறியதாவது: மனிதர்கள் நிலவுக்கு சென்று ஐம்பது வருடங்களை கடந்து விட்டது எனவும், தற்போது இரண்டாவது முறை மனிதர்கள் நிலவில் தரையிறங்க பல்வேறு முயற்சியுடன் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் எனவும், அதற்கு தேவையான விண்கல ராக்கெட்டை தயார் செய்து அதை நாசாவிடம் ஒப்படைப்பது தான் என் முக்கிய பணியாக உள்ளது எனக் கூறினார்.

Moon landing bombshell: Why Neil Armstrong was forced to lie over NASA Apollo 11 mission | World | News | Express.co.uk

அடுத்த கல்பனா சாவ்லா :

அந்த ஆர்ட்டெமிஸ் என்பது எஸ்.எல்.எஸ் ராக்கெட்டுடன் ஓரியன் விண்கலத்தை இணைத்து அனுப்புவது தான் எனவும், எங்கள் திட்டம் உறுதியாக விரைவில் வெற்றி பெரும் எனவும் தெரிவித்துள்ளார். கல்பனா சாவ்லா அவர்கள் இந்தியாவிற்கே பெருமை என்பது போல், இந்த கோவை பொண்ணும் நம் இந்தியாவிற்கே பெருமை தேடி தரப்போவது உறுதி.

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here