தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார் முக.ஸ்டாலின் அவர்கள். கூட்டணி கட்சியிலிருந்தும் மற்றும் வேற கட்சிகள், பிரபலங்களிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்தன. அப்பொழுது கலைஞரின் மகனும் ஸ்டாலினின் சகோதரருமான அழகிரியும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அழகிரி அவர்களை கலைஞர் ஆட்சியிலிருந்த போதே அவரை கட்சி பொறுப்பிலிருந்தும், அடிப்படைஉறுப்பினரிலுருந்தும் நீக்கப்பட்டது அனைவரும் தெரிந்த ஒன்றே. அதிலிருந்து கட்சியிலிருந்து தள்ளியே இருந்தார். இந்நிலையில் நேற்று ஸ்டாலின் அவர்கள் மதுரைக்கு விசிட் செய்ய வந்திருந்தார். அவர் மதுரையில் உள்ள அழகிரியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திருச்சி விசிட்டை முடித்த கையுடன் மீண்டும் மதுரை விருந்தினர் மாளிகைக்கு சென்றுவிட்டார். ஏன் அவர் அழகிரி வீட்டிற்கு செல்லவில்லை என்று கேட்டதற்கு அவருக்கு நம்ப தகுந்த வட்டாரங்கள் அழகிரி அவர்கள் கட்சியிலுருந்து நீக்கப்பட்டதால் அவரை சந்திப்பது கட்சி விதியை மீறுவதாக நினைத்திருக்கலாம். அல்லது அவரை அழகிரி அழைக்காததால் போகாமல் இருந்திருக்கலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.
இதை பற்றி அழகிரி அவரிடம் கேட்டதற்கு வீட்டுக்கு வருவதாக தகவல் எனக்கு தெரிவிக்க படவில்லை எனவும், அண்ணன் வீட்டிற்கு தம்பி வருவது எதார்த்தமே, ஸ்டாலின் அவர்கள் என் வீட்டிற்கு வந்தால் வரவேற்பேன் என கூறினார்.
நீக்கப்பட்டவர் வீட்டுக்கு போகவில்லை என்றாலும், சொந்த அண்ணன் வீட்டிற்கு போவதை யாரு கேப்பாங்க!! இவர் கூப்பிடவில்லை அதனால் போகவில்லை எனவும் அவர் வருவதை தெரிவிக்கவில்லை எனவும் காரணத்தை கூறுவதால் இவர்களது சந்திப்பு நடக்காமல் போயிற்று போல!!
மேலும் பல அப்டேட்களுக்கு :timestamil.in