கொரோனா தொற்று தமிழ்நாட்டில் பெருகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழா அரசு, சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்கள் என அனைவரும் போராடி வருகின்றனர். முதல்வர், தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிவா கார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சிவ கார்த்திகேயன்:
சிவ கார்த்திகேயன் இந்த விடியோவை ஆரம்பிக்கும் பொது கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசும் சுகாதாரத்துறையும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். மேலும் பல்வேறு விதிமுறைகளை சொல்லி இருக்கின்றனர். அவற்றில் சிலவற்றை உங்களோடு ஷேர் பண்ண விரும்புகிறேன். அதில் மிக முக்கியமானது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது. நான் முதல் டோஸ் போட்டுக்கொண்டேன் நீங்களும் போட்டுக்கோங்க. அத்தியாவச தேவைக்கும் மட்டும் வெளிய வாங்க. கைகளை சுத்தமாக வச்சுக்கோங்க. அப்படி வெளியே வரும் போது சமூக இடைவெளி விட்டு நில்லுங்க. கண்டிப்பா மாஸ்க் போடுங்க. இது எல்லாமே உங்களுக்கு தெரிஞ்சதுதான். இது எல்லாத்தையும் கடைபிடிப்பது நமது கடைமை. ஆனால் கொரோனா பற்றிய எந்த பயமும் இல்லாமல் நமக்காக உழைத்துக் கொண்டிருக்கிற முன்கள பணியாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும். நாம நினச்சா கொரோனாவில் இருந்து மீண்டுவிடலாம் என்று அந்த விடியோவை முடிக்கிறார்.
ஜெயம் ரவி:
ஜெயம் ரவி எல்லாரும் முகவசம் போடுங்கோங்க. அது நம்மளையும் மத்தவங்களையும் பாதுகாக்குது. முகவசம் உயிர் கவசம் என்று வீடியோவை ஆரம்பிக்கிறார். அதுபோல சமூக இடைவெளி கடைபிடிங்க. கைகளை சுத்தமாக வைத்து கொள்வோம். கிருமி நாசினி பயன்படுத்துங்க. கொரோனவை வெல்வோம். கொரோனா இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம். நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் என்று வீடியோ முடிகிறது.
நாசர்:
நாசர் நாம ஒரு கடுமையான கொடுமையான காலகட்டத்தில் இருக்கோம். நாமதான் தமிழக அரசுக்கு ஒத்துழைத்து இதை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கொரோனா தானாக பரவுவதில்லை. ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்கு தொற்றுகிறது. இந்த சங்கிலியை ஓடைக்கணும் பரவலை கட்டுப்படுத்தனும். அதற்காகத்தான் அரசு உரடங்கை போட்டு இருகாங்க. அதை நாம ஒழுங்கா கடைபிடிக்க வேண்டும். தயவு செஞ்சு தேவைபட்டொழிய வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். கொரோனவை வெல்வோம் மக்களை காப்பாற்றுவோம்.