டெக்
பாரத ஸ்டேட் வங்கியில் மே 21 முதல் 23 வரை எந்த சேவைகளையும் பயன்படுத்த முடியாது என்று அந்த வங்கி அறிவித்துள்ளது. இது குறித்து SBI வெயிட்டுள்ள அறிக்கையில் இந்த மூன்று நாள்களும் நெட் பாங்கிங், YONO Lite, YONO மற்றும் UPI என எவையும் செயல்படாது என்று அறிவித்துள்ளது.
எனினும் இந்த வசதி இந்த மூன்று நாட்களும் சில நேரங்களில் மட்டுமே செயல்படாது எனவும் கூறியுள்ளது. அதன் படி மே 21 அன்று இரவு 10.45 மணியிலிருந்து நள்ளிரவு 1.15 வரையும், 23 தேதி நள்ளிரவு 2.40 மணி முதல் அடுத்த நாள் காலை 6.10 மணி வரைக்கும் இந்த சேவைகளை பயன்படுத்த முடியாது என்று SBI தெரிவித்துள்ளது.