அஸ்வின் அந்த அளவு சிறந்த வீரர் இல்லை : சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

sanjay manjrekar vs aswin Latest Update in tamil

1
9
Facebook
Twitter
WhatsApp
Telegram

முன்னாள் இந்தியா வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவர்கள் தற்போது ஒரு பதிவை தெரிவித்துள்ளார். அது என்னவென்றால் இந்தியாவின் சிறந்த ஸ்பின் பவுலராக கருதப்படும் அஸ்வின் அவர்களை ” அஸ்வின் எல்லா காலத்திற்கும் அவர் சிறந்த வீராக பட்டியலில் சேர்க்க முடியாது என கூறியுள்ளது பெரும் சர்ச்சையாக உள்ளது.

ஆல்ரவுண்டர் அஸ்வின்:

இந்தியா கிரிக்கெட் அணியில் பெரிய பவுலிங் ஜாம்பவானாக இருந்தவர் அஸ்வின் அவர்கள். 32 வயதான அஸ்வின் டெஸ்ட் விளையாட்டில் 2வது சிறந்த வீராகவும், ஆல்ரவுண்டர் தரப்பில் 3 வது வீராக இறக்கும் அஸ்வின் அவர்கள் டெஸ்ட் போட்டியில் அதிவேகம் 199, 200,300,400 விக்கெட்டுகளை பெற்ற முதல் இந்தியா வீரர் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.அதுமட்டுமில்லாமல் சாம்பியன் ஷிப் தொடரில் 13 போட்டிகளில் 67 விக்கெட்டுகளை செய்த முதல் இந்தியா வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்.

Sanjay Manjrekar has "problems accepting Ashwin as a real all time great"

வம்பிழுத்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் :

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அவர்கள் அஸ்வினை பற்றி கூறுகையில்: நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடந்த போட்டிகளில் அவரால் 5 விக்கெட்டுகளை எடுத்து ஜொலிக்கமுடியவில்லை எனவும், அவர் இந்திய மண்ணில் தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த முடிகிறது. சென்ற நான்கு வருடங்களில் அஸ்வினுக்கு இணையாக ஜடேஜாவும் விக்கெட்டுகளை வீழ்த்திகிறார் எனவும், போன இங்கிலாந்து போட்டிகளில்கூட அக்சல் படேல் தான் அதிக விக்கெட்டை எடுத்தார் இவர் அதில் தவறிவிட்டாரெனவும், எனவே அஸ்வின் எல்லா காலத்திற்கும் ஏற்ற வீரர் கிடையாது என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளார். Must Read: புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? தெரிந்துகொள்வோம்!!

Three Indians Feature In Ian Chappell's Top-five Current Bowlers; Sanjay Manjrekar Has 'Problems' With One

சேப்பல் கொடுத்த பதிலடி :

முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் இயான் சேப்பல் அவர்கள் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியதற்கு பதிலடி குடுக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். அதில் உலகின் மிக சிறந்த வேக பந்து வீச்சாளரான விண்டீசின் ஜோயல் கார்னர் அவர் எத்தனை முறை 5 விக்கெட்டுகளை பெற்றுள்ளார் . அவரையும் நாம் சிறந்த வீரர் என கூறவில்லையா?. இந்தியாவின் சிறந்த 3 வீரர்களோடு அஸ்வின் பந்து வீசி வருகிறார்.

அஸ்வின் ஆபத்தானவர் என்பதால் இங்கிலாந்து வீரர்கள் அஸ்வினின் பவுலிங்கிற்கு யோசிச்சு நிதானமாக விளையாடினர். அனால் அக்சல் படேல் புதிய வீரர் என்பதால் கொஞ்சம் தடுமாறினார்கள் என தெரிவித்துள்ளார்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பதில் :

தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கமான ட்விட்டரில் அவர் என்ன தெரிவித்துள்ளார் என்றல் ” ஒரு சிறந்த வீரருக்கு கொடுக்கும் பட்டம் அனைவரும் கொடுக்கும் பாராட்டுதான் எனவும், எல்லா காலத்திலும் சிறந்த வீரர் (ஆல் டைம் கிரேட்) என்னுடைய பட்டியலில் பிராட்மேன், கேரி சோபர்ஸ், சச்சின், கோலி உள்ளனர் எனவும், இதில் அஸ்வின் அவர்களுக்கு இடம் இல்லை எனவும், அதனால் அவ்வாறு கூறியதாகவும் பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே சென்ற போட்டித்தொடரில் வர்ணனையாளராக இருந்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஜடேஜா ஒரு சுமாரான பவுலர் தான் என குறிப்பிட்டிருந்தார். எதிர்ப்புகள் அதிகமாக கிளம்பவே அவரை அந்த பணியிலிருந்து நீக்கினார். அடுத்து தற்போது அஸ்வினை பற்றி கூறி எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்கலாம்ல !!

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here