நாளுக்குநாள் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து மருந்து வாங்கும் முறையில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வரை கீழ்பாக்கத்திலுள்ள சென்னை அரசு மருத்துவமணையில் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வந்தது.
அங்கு கூட்ட நெரிசல் அதிகமானதால் சில தினங்களுக்கு முன்பு நேரு உள் விளையாட்டு அரங்குக்கு மருந்து விநியோகம் மாற்றப்பட்டது. காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டு மருந்து வாங்க லைனில் வெகு நேரம் காத்துக்கொண்டும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தனர். இதன் அடிப்படையில் இன்று (மே 16) தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த முடிவு முதல் அமைச்சர் மு க ஸ்டாலின், Health and Family welfare அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் Health secretery ராதாகிருஷ்ணன் இடையேயான கலந்தாய்வுக்கு பின் எடுக்கப்பட்டுள்ளது.
Procedure to Follow :
1.இதற்கென்று அரசு தனி வெப்சைட் ஒன்றை ஆரம்பிக்கும் அதில் நோயாளியை பற்றிய விவரம் மற்றும் எவ்வளவு ரெம்டெசிவிர் மருந்து தேவை என்று குறிப்பிட வேண்டும். அந்த ரெக்வஸ்ட் சரிபார்த்து மறுத்து அலகேஷன் செய்தபின், மருத்துவமனை அவர்களுடைய ரெப்ரசென்டடிவ் வை அனுப்பி வாங்கிக் கொள்ளலாம்.
- மேலும் மருத்துவனை நோயாளிக்கு தேவைப்பட்டால் மட்டுமே இந்த மருந்தை வழங்க வேண்டும் என்றும் இதற்கான பணத்தை அதாவது அரசு மருத்துவமனைக்கு எவ்வாறு சார்ஜ் செய்கிறதோ அதையே நோயாளியிடம் பெற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
- Department of Medical மற்றும் Family welfare department மருந்துகளை கள்ள சந்தைக்கு செல்லாமல் பாதுகாக்க வேண்டும். மருந்துகளை தவறாக பயன்படுத்தும் மருத்துவமனையின் மேல் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரித்துள்ளது.