தமிழ்நாட்டில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மே 10 தேதி முதல் 24 தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தபட்டு இருந்தது. இதற்கு பலன் ஏதும் கிடைக்காத பட்சத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீடித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் அத்தியாவச பொருள்கள் தவிர அதாவது பால், மருந்து கடை, பெட்ரோல், டீசல் இன்னும் சில கடைகள் தவிர வேறு எந்த கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
வீடு வீடாக சென்று காய்கறி விற்பனை:
தமிழக அரசு காற்கறி பண்ணையின் மூலமாக காய்கறியை அவர் அவர் வீட்டிற்கு சென்றே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி காய்கறி வண்டியின் மூலமாக மக்களுடைய வீட்டிற்கே சென்று விற்பனை செய்யப்படுகிறது.
ரேஷன் கடை திறக்க அனுமதி:
எந்த கடைகளும் திறக்க அனுமதி வழங்காத பட்சத்தில் அத்தியாவச பொருட்கள் வாங்குவதற்கு ரேஷன் கடை திறந்து இருக்குமா என்ற கேள்வி எழும்பியது. மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியாக சொன்ன ரேஷன் கார்டு ஒன்றுக்கு 4000 அளிக்கப்படும் என்ற அறிவிப்பில் ஏற்கனவே அனைவருக்கும் முதல் தவணையாக 2000 வழங்கப்பட்டுவிட்டது. மேலும் ஒரு சிலர் அந்த பணத்தை இன்னும் வாங்கவில்லை. அவர்கள் பணம் வாங்க ரேஷன் கடை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கபட்டது.
அமைச்சர் உத்தரவு:
இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறும் போது,” மக்களிடம் இருந்து ரேஷன் கடை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வந்தது. இது குறித்து முதல்வர் மு க ஸ்டாலினுடன் ஆலோசித்த பிறகு முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார். இந்நிலையில் மே 24 முதல் 31 தேதி வரை ரேஷன் கடை பகல் 8 மணி முதல் 12 மணி வரை திறந்து இருக்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
அடுத்த தவணை பணம் எப்போது:
இன்னும் ரேஷன் கார்டுக்கு அடுத்த தவணையாக 2000 வழங்க வேண்டியுள்ளது. கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 முன்பே இந்த பணம் வழங்கப்படும் என்று முதலவர் அறிவித்துள்ளார். அவற்றை வாங்குவதற்கு ரேஷன் கடைகள் திறந்த இருக்க வேண்டும். எனவே சில கட்டுப்பாடுகளுடன் ரேஷன் கடைகள் திறந்து இடுக்கை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.