
வருத்த படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் படத்தில் நடித்த நடிகரும் உதவி இயக்குனருமான பவுன்ராஜ் இன்று மாரடைப்பால் காலமானார்.

கடந்த மாதத்தில் இருந்தே திரை உலகத்தில் உள்ளவர்களுக்கு சோகமான மாதம் தான். கடந்த மாதம் நடிகர் விவேக் மரணம், அவரை தொடர்ந்து இந்த மாதம் நடிகர் பாண்டு, இயக்குனர் கே வி ஆனந்த் மற்றும் சமீபத்தில் நெல்லை சிவாவின் மரணம் என தொடந்து திரை உலக பிரபலங்கள் மரணித்து வருவது ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பவுன்ராஜ் மரணம் அடைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரஜினி முருகன் படத்தில் என்னடா மதுரைகாரணுக்கு வந்த சோதனை என்ற காமெடி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அவரையும் திரை உலகம் இழந்துள்ளது.