அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி அவர் குடுக்கும் பேட்டியின் மூலம் பிரபலம். போன ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர். அவருடைய பேச்சும், செயலும் சர்ச்சையாகி வருவது வாடிக்கையாக இருந்தது. மோடி எங்கள் டாடி என அவர்கூறிய டயலாக் வேற லெவெலில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
ராஜேந்திர பாலாஜிக்கு அதிமுக கட்சியில் நல்ல பெயரில்லை எனவும், கட்சியினரிடமும் சுமுகமான இணக்கமும் இல்லை. அவருடைய தொகுதியான சிவகாசியில் கூட வெறுப்பை தான் சம்பாதித்துள்ளார். எனவே தான் நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவகாசியை விட்டுவிட்டு ராஜபாளையம் தொகுதியில் நின்றார். அதிலும் வெகு சுலபமாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தார்.
இவர் எதிர்க்கட்சி திமுகவை பேசிய பேச்சுக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும் செம செய்கை இருக்குனு எதிர்பார்த்த சூழ்நிலையில் தான் கொரோனா பிரச்சனையில் ஆட்சிக்கு வந்த திமுக அதை கவனிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. எனினும் இதை முடிச்ச கையோட ஊழல் பிரச்சனையா கைல எடுக்கும். அதுல பால் வளக்கணக்கில் ஊழல் என பல்வேறு துறையில் லிஸ்ட் எடுத்த அதுல நான்தான் முதல் ஆள் என பயந்துகொண்டு இருக்கிறாராம்.
எனவே இந்த லிஸ்ட் எடுத்த அதுல இருந்து தப்பிக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் பாஜக கட்சியில போய் சரண்டர் ஆகுற முடிவுல இருக்கிறாராம். அப்போ தான் தப்பிக்க முடியும் எனவும் எப்படியும் சொந்த கட்சி காப்பாத்த வாய்ப்பே இல்லைனு.. அவர் டாடின்னு சொன்ன கட்சிக்கே சேர போவதாக அவர் வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்திருக்காம்!!
மேலும் பல அப்டேட்களுக்கு :timestamil.in