என் வாசல் உன் பாதம் எங்கேனு கேக்குதடி!! – இளம் பெண்களின் கனவு நாயகனாக உலா வரும் ராஜா ராணி2 பாஸ்கர் வெளியிட்ட ரீல்ஸ்!

0
35
Facebook
Twitter
WhatsApp
Telegram
Join @ Times Tamil on Telegram

ராஜா ரணி 2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற சீரியல் தான் ராஜா ராணி 2. கூட்டு குஉடம்ப கதைக்களத்தை அடிப்படையாக கொண்ட இந்த சீரியலில் தற்போது ஒரு புதிய கதாபாத்திரமாக அறிமுகமாகி உள்ளவர் தான் அஸ்வின் கண்ணன். பார்வதியின் காதலனாக நடித்து கொண்டு இருந்த விக்கியின் கதாபாத்திரம் தற்போது முடிவுக்கு வந்துள்ள காரணத்தினால், பார்வதிக்கு ஜோடியாக பாஸ்கர் எனும் பெயரோடு நடித்து கொண்டு உள்ளார் அஸ்வின் கண்ணன்!

இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரும்!! மலரும் ரொமான்ஸ்! – Pandian Stores Serial Today Episode 20/08/2021

காதல் மன்னன்!

ree

பார்வதியை துரத்தி துரத்தி காதலித்த விதத்தை கண்டே ரசிகர் கூட்டம் இவருக்கு அதிகமானது. குறிப்பாக பார்வதி எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும், எவ்வளவு அவமானப்படுத்தினாலும் கூட தன்னுடைய உண்மையான காதலை பார்வதி எப்படியாவது புரிந்து கொள்வார்கள் என்று விடாமுயற்சியுடன் , தன்னம்பிக்கையுடன் தனது காதலை மட்டுமே நம்பி இருந்த பாஸ்கருக்கு தற்போது பார்வதி உடனேயே நிச்சயதார்த்தம் நடக்க போகிறது என்ற சேதியை கேட்டவுடன் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அஞ்சலிக்கு விஷம் கொடுக்க போகும் வெண்பா!! – Bharathi Kannamma Serial Today Episode 20/08/2021

அதீத நம்பிக்கை

தன்னுடைய காதலியை பற்றி பிறர் என சொன்னாலும் அதை நம்பாமல், தனது காதலி மீது மட்டுமே அதீத நம்பிக்கை கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரமாக இந்த பாஸ்கர் உடைய கேரக்டர் அதிகரித்து உள்ளது. நாளை நடக்க போகும் நிச்சயதார்தத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றி திட்டம் தீட்டி கொண்டிருக்கும் அர்ச்சனாவின் மத்தியில் நிச்சயம் எப்படி நடக்கப்போகிறது என்பது கொஞ்சம் விறுவிறுப்பாக தான் உள்ளது.

உழைப்புக்கு கிடைத்த பரிசு! – பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை பின்தொடர்பவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?

சூப்பர் டூப்பர் ரீல்ஸ்

புதிதாக அறிமுகமான கதாபாத்திரம் என்றாலும் கூட, பார்ப்பதற்கு செம்ம அழகாக இருப்பதால் யார் இவர் என்று ரசிகர்கள் தற்போது பேஸ் புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இவருடைய ஐடி யை தேட தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தற்போது அஸ்வின் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பரான ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டு உள்ளார். சந்தோஷ் சுப்ரமமணியம் படத்தில் வரும் அடடா அடடா அட டா!! என்னை ஏதோ செல்கிறாய் பாட்டிற்கு ரீல்ஸ் செய்துள்ளார். இந்த ரீல்ஸ் தற்போது வேற லெவலில் வைரல் ஆகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Ashwin_Kannan🇮🇳 (@ashwinkannan_official)

டைம்ஸ் தமிழ் பேஸ்புக் பக்கத்தில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!


டைம்ஸ் தமிழின் வாட்சப் குரூப்பில் இணைய இங்க கிளிக் செய்யுங்க!!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Previous articleஉழைப்புக்கு கிடைத்த பரிசு! – பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையை பின்தொடர்பவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா?
Next articleகண்ணம்மாவை வச்சு செய்யும் பாரதி! பாதிக்கும் லட்சுமி! Bharathi Kannamma Serial Today Episode 20/08/2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here