நடிகர் லாரன்ஸ் என சொல்லும் போதே அவரா நல்ல மனுஷன்யா என்று ஊரே சொல்லக்கொண்டிருக்கும் வேளையில் இங்க ஒரு டைரக்டர் அவரா ஒன்னா நம்பர் டுபாக்கூர் என்றும் சுயநலத்துக்கு விளம்பரம் தேடுபவர் என்றும் திட்டி தீர்த்து வருகிறார். நடிகர் லாரன்ஸ் அவர்கள் சினிமாவின் தொடக்கத்தில் உதவி நடன இயக்குனராக தன் வாழ்க்கையை தொடங்கினர். நாளடைவில் நடன இயக்குனராக வளர்ந்து நடிகராவாகவும் உயர்ந்தார். இவர் பொது வாழ்க்கையில் பல்வேறு உதவிகளை பொது மக்களுக்கும், உடல் ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கு என தனி அறக்கட்டளை நிறுவி உதவி வருகிறார்.
இந்நிலையில் டைரக்டர் ஆகாஷ் சுதாகர் என்பவர் அவரை ” ஒன்னா நம்பர் டுபாக்கூர் எனவும், தன் சுயநலத்திற்காக விளம்பரம் தேடுகிறார் எனக்கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாகியுள்ளது. ஆகாஷ் சுதாகர் என்பவர் நரிவேட்டை என்னும் படத்தை இயக்கி வருகிறார். அங்காடி தெரு படத்தில் நடித்த நடிகை சிந்து அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் ராகவா லாரன்சிடம் உதவி கேட்டதாவும் அதற்கு ராகவா லாரன்ஸ் உதவ முன் வராததால் இவ்வாறு ஆகாஷ் பேசிவருகிறார் என கூறப்படுகிறது. இதில் ஆளைவைத்து தூங்கிவிடுவேன் என்று கூறியது இன்னும் வேற லெவல்.
ஒருவர் சூழ்நிலையை புரிந்து கொண்டு பேசவேண்டும். எப்போதும் உதவி கொண்டு இருப்பவர் இதற்கு உதவ முடியவில்லை என்றல் இவ்வாறு பேசுவது, உதவியை மிரட்டி வாங்க முடியாது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.