![PTR-vanathi பொய்க்கு என்னை டேக் செய்யாதீர்கள்](/wp-content/uploads/2021/05/PTR-vanathi-696x368.jpg)
சில நாளைக்கு முன் நடந்த GST கவுன்சில் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட PT தியாகராஜனுக்கு வானதி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து இருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உங்கள் பொய்களை சொல்வதற்கு என்னை டேக் செய்யாதீர்கள். மாற்றம் வேண்டுமெனில் உண்மையாக உழையுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
GST கவுன்சில் கூட்டத்தொடர்:
![](/wp-content/uploads/2021/05/PTR-PALANIVEL-THIAGARAJAN.jpg)
சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு நடித்திய GST கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழக அரசு சார்பாக PTR கலந்துகொண்டார். அந்த கூட்டத்திலேயே தமிழகத்தின் உரிமையை பேச அதிக நேரம் வழங்கப்படிவில்லை என்று கூறி இருந்தார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அதில் கோவாவின் அமைச்சருக்கு அதிக நேரம் பேச வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதைவிட பெரிய மாநிலமான தமிழ்நாடு, உத்திர பிரதேசம், மற்றும் மகாராஷ்டிரா போன்றவற்றிற்கு குறைந்த நேரமே வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதை கூட்டத்தின் போதே PTR சொல்லியதால் கோவாவின் அமைச்சர் கடுப்பானதாக தெரிகிறது.
வானதி விளாசல்:
![](/wp-content/uploads/2021/05/vaanthi-1024x569.jpg)
இதற்கு வானதி ஸ்ரீனிவாசன் ட்விட்டரில் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருந்தார். அதில் அவர் “GST கவுன்சில் கூட்டத்தில் PTR அவர்கள் நடந்து கொண்டவிதம் ஜனநாயகத்தை அவமதிப்பது மேலும் நமது அரசின் பிம்பத்தை கெடுக்கும். கோவாவின் அமைச்சரை வாய்மொழியாக துஸ்பிரயோகம் செய்ததை தவிர தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அமைச்சர்கள் ஒன்றும் செய்யவில்லை. மேலும் PTR அவர்கள் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பதிவு செய்து இருந்தார்.
Read More: முதல்வர் அறிவித்த 13 இலவச பொருட்கள் எப்பதான் தருவார்கள்?
பொய்க்கு என்னை டேக் செய்யாதீர்கள்:
வானதி ஸ்ரீனிவாசன் டீவீட்டுக்கு ரீடீவீட் செய்த PTR” உங்கள் பொய்க்கு என்னை டேக் செய்யாதீர்கள். மாற்றம் வேண்டும் என்றால் கொஞ்சம் வேலைசெய்யுங்கள். நீங்கள் பிறவி பொய்யர் அல்லது குறைந்த IQ உடையவர். GST கவுன்சில் கூட்டத்தில் ஒருவர் இன்னொருவரை அவமதித்ததாக நீங்கள் நினைக்கிறீர்கள். பொறு பொறு பதிலளிக்க வேண்டாம். இது தந்திரமான கேள்வி. நீங்கள் இரண்டுபேரும்” என்று பதிவு செய்து இருந்தார்.
தொடரும் மோதல்:
இதன் பின் PTR வானதி ஸ்ரீனிவாசன் ட்விட்டரை பிளாக் செய்துவிட்டார். இதை screen ஷாட் எடுத்து பதிலளித்த வானதி” தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் விமர்ச்சனங்களை அஞ்சுகிறார். நீங்கள் என்னை பொய்யர் அல்லது IQ குறைந்தவர் என்று கூறலாம். ஆனால் அது உண்மையை மாற்றாது. நீங்கள் H ராஜா மற்றும் ஜக்கி பற்றி கூறிய கருத்துக்கள் மூலம் உங்கள் மோசமான தன்மையை அறிந்து கொண்டோம்” என்று கூறியிருந்தார்.
நேரத்தை வீணாக்காதீர்கள் ப்ளீஸ்:
இதற்கு பதிலளித்த PTR “நீங்கள் ஒருமுறை திமுக செய்தி தொடர்பாளரை இப்பொழுதெல்லாம் சடலங்கள் அதிகமாக விழவில்லை என்பதால் வருத்தத்தில் இருக்கிறார் என்று கூறி இருந்தீர்கள். கெட்ட வாடை வரும்போது யாரும் ஜன்னலை திறந்து வைக்கமாட்டார்கள். அதற்காகத்தான் உங்கள் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்தேன். உங்களிடமிருந்து நல்ல பெயரை வாங்க விரும்பவில்லை. என்னுடைய நேரத்தை வீணாக்காதீர்கள் ப்ளீஸ்” என்று பதிவு செய்து இருந்தார்.
பிரச்னை மேல் பிரச்னை:
ஏற்கனவே PTR அவர்களும் H ராஜா அவர்களுக்கும் சில வாரங்களுக்கு முன்பாக மோதல் ஏற்பட்டது. ஜக்கியை பற்றி PTR சில விஷயங்கள் கூற அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக H ராஜா இவர் யார் என்று கேட்டு பிரச்சனையை பெரிதாக மாற்றினார். அதற்கு பதிலளித்த PTR நாய் குறைப்பதற்கெல்லாம் பதில் கூற முடியாது என்று பதிலடி கொடுத்தார். அந்த பிரச்சனையே இன்னும் ஓயாத பட்சத்தில் அடுத்து PTR மற்றும் வானதி ஸ்ரீவிவாசனுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இது போன்ற பல்வேறு செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – times tamil