![m-k-stalin-and-murugan-jpg_1200x900](/wp-content/uploads/2021/06/m-k-stalin-and-murugan-jpg_1200x900-696x380.jpg)
![Seat-sharing talks with AIADMK not 'dragging': TN BJP chief | India News,The Indian Express](https://images.indianexpress.com/2021/03/L-Murugan-1.jpg)
![Seat-sharing talks with AIADMK not 'dragging': TN BJP chief | India News,The Indian Express](https://images.indianexpress.com/2021/03/L-Murugan-1.jpg)
தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்த திமுகவுக்கும் பிஜேபிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். திமுகவின் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் வேற லெவல் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஏனென்றால் அவர் கேட்கும் கேள்விகள் மற்றும் அவரது நிதி நிலைமைகள் பற்றிய புரிதல் மக்களால் இப்போது கட்சிக்கு அப்பாற்பட்டு வரவேற்க பட்டுவருகிறது.
திமுக, பிஜேபி இடையே போர்:
பிஜேபியை சார்ந்த எச்.ராஜா அவர்களுக்கும் பி.டி.ஆர். தியாகராஜன் அவர்களுக்கும் நடந்த மோதல்கள் சமூக வலைத்தளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும் கிளப்பியது. அதே போல் கோவை தொகுதி அமைச்சராக இருக்கும் பிஜேபியை சார்ந்த வானதி ஸ்ரீனிவாசன் அவர்களும் பி.டி.ஆர். தியாகராஜன் அவர்களும் ஏற்பட்ட மோதல் தான். வார்தைபோராக மாறிய அந்த ட்விட்டரில் நடந்தது. இவ்வாறு திமுகவிற்கு பிஜேபிக்கும் சிறு சிறு மோதல்கள் நடைபெற்றுவருகிறது.
![மு.க. ஸ்டாலினுக்கு பொறுப்பே இல்ல... கொரோனா காலத்தில் கொடைக்கானலில் இருப்பதா..? எல்.முருகன் ஆவேசம்..! | Stalin is not responsible... he is to be in Kodaikanal during the ...](https://static-ai.asianetnews.com/images/01f0jsjwx54mk729bthh2xtk9v/lmurugan3453-1603703670-jpg.jpg)

எச்சரிக்கை விடுத்த எல்.முருகன்:
இந்நிலையில் பிஜேபியின் தமிழ்நாடு தலைவர் எல்.முருகன் அவர்கள் உங்கள் அமைச்சர்களை அடங்கிப்போக சொல்லுங்க. மத்திய அமைச்சரோடு இனைந்து போனால்தான் மாநிலத்திற்கு நன்மைகள் கிடைக்கும் என வெளிப்படையாகவே தன்னுடைய எச்சரிக்கையை பதிவிட்டுள்ளார். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கூறியது போல மாநில அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநிலத்திற்கு நன்மைகள் கிடைக்கும் என கூறியுள்ளதை குறிப்பிட்டுள்ளார். இதை எப்பொழுதெல்லாம் கூறுகிறாரே அப்போதெல்லாம் திமுக ஆளும் கட்சியாக இருந்தது குறிப்பிட தக்கது. திமுகவினர் இதை கடைபிடிக்க தவறியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இதற்குமுன் கொரோனா முதல் அலைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு தவறியதால்தான் இரண்டாம் அலைக்கு காரணம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக கொரோனா முதல் அலைக்கு முற்று புள்ளி வைக்க விடவில்லை. எனவே இரண்டாம் அலையை சந்திக்க நேர்ந்தது என தமிழக பிஜேபி தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். அதிலும் உங்கள் நிதியமைச்சர் செய்வது சிறு பிள்ளைத்தனமாக உள்ளது என தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது.
![Smiles all around as PM Modi pays a visit to DMK's M Karunanidhi | The News Minute](https://www.thenewsminute.com/sites/all/var/www/images/modi_stalin-kanimozhi-min.jpg)
![Smiles all around as PM Modi pays a visit to DMK's M Karunanidhi | The News Minute](https://www.thenewsminute.com/sites/all/var/www/images/modi_stalin-kanimozhi-min.jpg)
மத்திய அரசின் அக்கறை:
தமிழ்நாட்டிற்கு நேற்று 4 லட்சத்து 20 ஆயிரம் கோவிஷீல்டும், 75ஆயிரம் கோவக்சினும் மத்திய அரசு அனுப்பியுள்ளதாகவும், 12 கோடி தடுப்பு மருந்துகள் அனுப்பிவைப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என கூறினார். மத்திய அரசு மக்கள் உயிரின் மேல் அக்கறை வைத்துள்ளது. ஆனால் மாநில அரசுக்குத்தான் அக்கறை இல்லையென்றும் தெரிவித்தார். ஆகஸ்ட் முதல் டிசம்பருக்குள் அனைவர்க்கும் தடுப்பூசி போடப்படும் என மத்தியமைச்சர் ஹர்ஸ் வர்தன் தெரிவித்துள்ளார்.
எனவே திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கூறியது போல் மத்திய அரசோடு இணைக்கமான சூழலை உருவாக்கி கொண்டால் மாநில மக்களுக்கு கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்கும் எனவும் உங்கள் கட்சி அமைச்சர்களை இணைக்கமாக நடக்க சொல்லுங்கள என எல்.முருகன் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – times tamil
[…] உங்க கட்சி அமைச்சர்களை முதல்ல அடக்கி… […]