பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6000 வழங்கப்படும் திட்டத்தின் மூலம் மத்திய அரசு வங்கி கணக்கில் நேரடியாக போடப்பட்டு வருகிறது.
8 வது தவணை பணம்:
இந்நிலையில் கடந்த ரம்ஜான் பெருநாள் அன்று 8 வது தவணை பணம் 2000 ரூபாயை எல்லா விவசாயிகள் கணக்குக்கு அனுப்பப்பட்டு வருகிறது. பரவி வரும் கொரோனா சூழலில் இப்பணம் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் விரைவாக எல்லா கணக்குகளிலும் போட அறிவுரை வழங்கியுள்ளார். ரம்ஜான் என்று 10 கோடி விவசாயிகளுக்கு இவ்வுதவியை பிரதமர் வழங்கினார். இதுவரை விவசாயிகளுக்கு 20000 கோடி ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
பயனாளியின் பெயர் இருக்கா?இல்லையா?
விவசாயிகள் இத்திட்டத்திற்கு பதிவு செய்தப்பின் நமது பெயர் இத்தட்டத்தில் இருக்கா என்ற சந்தேகம் வரும். அவற்றை செக் செய்ய https://pmkisan.gov.in/san.gov.in என்ற இணையத்துக்கு சென்று அங்கு ’farmers corner’ என்பதை கிளிக் செய்ய வேண்டும் அதில் beneficiary list ல் கிளிக் செய்து உல் நுழைய வேண்டும். பின்னர் மாநிலம், மாவட்டம், பிரிவு மற்றும் கிராமத்தின் பெயரை என்டர் செய்து Get information என்று கொடுக்கும் பொது நீங்கள் அதில் பயனாளியாய் இருந்தால் அங்கே உங்கள் விவரம் தெரியும்.
பணம் கிடைக்கலையா எங்கே புகார் அளிப்பது?
விவசாய திட்டத்தின் கீழ் இவ்வுதவி உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதன் விவரங்களை தெரிந்துகொள்ள மற்றும் புகார் அளிக்க டோல் பிரீ எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டுள்ளது.
பிஎம் கிசான் டோல் ஃப்ரீ நம்பர்: 18001155266,
பிஎம் கிசான் ஹெல்ப் லைன் நம்பர்: 155261,
பிஎம் கிசான் லேண்ட் லைன் நம்பர்: 011-23381092, 23382401,
பிஎம் கிசான் புதிய உதவி எண்: 011-24300606,
பிஎம் கிசான் ஹெல்ப் லைன்: 0120-6025109,
மின்னஞ்சல் முகவரி: [email protected]