மோடியிடம் முறையிட்ட 6 வயசு குழந்தை – 4 மணி நேரம் ஆன்லைன் கிளாஸ் என்னால முடியலை!!

0
34
Facebook
Twitter
WhatsApp
Telegram

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் எல்லா மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளும் சின்ன குழந்தை பிரதமர் மோடியிடம் முறையிடுவதுபோல் ஒரு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

பாடாய்படுத்தும் ஆன்லைன் கிளாஸ்:

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா பரவலினால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக கல்வியை போதிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. அதே போல் அனைத்து மாநிலங்களும் ஆன்லைன் வழியாக தங்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்தனர்.

காஷ்மீர் சிறுமி:

ஆன்லைன் கிளாஸ்

இதேபோல் காஷ்மீரிலும் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டது. இதில் 6 வயது சிறுமி ஒன்று ஆன்லைன் கிளாசில் படும் பாடை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் “எனக்கு ஆன்லைன் கிளாஸ் காலை 10 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. பிரதமர் அவர்களே சிறுபிள்ளைகளை ஆசிரியர்கள் ஏன் இவ்வளவு வேலை வாங்குகிறார்கள். 6 மற்றும் 7ம் வகுப்பு படிப்பவர்களுக்கு கொடுக்கும் வீட்டு பாடத்தை எங்களுக்கு தருகிறார்கள்” என்று அவரது அழகான குரலில் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

வைரலாகும் வீடியோ:

online class ஆன்லைன் கிளாஸ்

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களுடைய ஆதரவை அந்த சிறுமிக்கு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆன்லைன் கிளாசில் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆன்லைன் கிளாசில் படும் துயரத்திலிருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.

Must Read: சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா- ஜகமே தந்திரம் ட்ரைலர் வெளியீடு

உடனடியாக கிடைத்த பதில்:

இந்த வீடியோ காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் கவனத்திற்கு சென்றது. அந்த விடியோவை இணைத்து ட்வீட் செய்த ஆளுநர் ” பள்ளிமாணவர்களின் பாட சுமைகளை குறைக்க இன்னும் 48 மணி நேரத்தில் புது கொள்கைகளை கொண்டு வர வேண்டும் என்று பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுளேன். குழந்தைப்பருவம் ஒரு அப்பாவித்தனமான பருவம். அவர்கள் கடவுளின் கிபிட். இந்த நாட்கள் மகிழ்ச்சியுடனும், அனந்தத்துடனும் கலகலப்புடனும் இருக்க வேண்டிய நாட்கள்” என்று துணை நிலை ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள்times tamil

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here