நாடு முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் கொரோனா தொற்று ஒன்று கூட ஏற்படாமல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலச்சரிவு, பெருவெள்ளம் மற்றும் எபோலா என்று இயற்கை பேரிடர் ஏற்பட்டு கேரளா பாதிக்கப்பட்டதை போல கொரோனா வைரஸினால் அதிக பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அங்கு ஒருநாள் தொற்று 40000 ஐ கடந்து வரும் நிலையில் ஒரு கிராமத்தில் மட்டும் தடுப்பூசி மற்றும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படவில்லை. இதற்கு காரணம் என்ன என்றால் அங்கு ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதை கேட்டதும் ஆச்சர்யமாய் இருக்காது அல்லவா?
அந்த கிராமத்தின் பெயர் என்ன என்றால் இடமலக்குடி என்கிற பழங்குடி கிராமம். கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ளது இந்த கிராமம். இக்கிராமத்தில் 3500 க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். ஒருவருக்கு கூட இந்த கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்படவில்லை.சுய ஊரடங்கு மற்றும் வெளி ஆட்கள் உள்ளே வர தடை போன்றவற்றை கடைபிடித்து வருகின்றனர். அதே போல் கிராமத்தில் விளைந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.
இந்த காரணங்களால் கொரோனா தொற்றின் முதல் அலையிலிருந்தே ஒரு தொற்று கூட ஏற்படவில்லை. முதல் அலையின் பொது தாங்களாகவே முன் வந்து தனிமை படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை பின்பற்றி வந்ததால் இன்று அக்கிராமமே பாதுகாப்போடு இருக்கிறது. மலைவாழ் மக்களின் மூப்பன் என்று அழைக்கப்படும் குடிகளின் தலைவன் முழு உரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளம் நிலச்சரிவு போன்ற காரணங்களால் கிராமத்திற்காண போக்குவரத்து இயற்கையாகவே துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் இயற்கையாகவே இக்கிராமம் தனித்து விடப்பட்டது. மேலும் இக்கர்மத்திலுருந்து யாரேனும் வெளியில் சென்று விட்டு திரும்பும் பொழுது 14 நாட்கள் தனிமையில் இருந்த பின் தான் கிராமத்திற்குள் சேர்த்துக்கொள்வர்.
உலகமே கொரோனாவை கட்டுப்படுத்த கடினப்பட்டு வரும் இந்த சூழலில் இந்த கிராமம் கொரோனா இல்லாமல் மற்ற ஊர்களுக்கு முன் உதாரணமாக உள்ளது.