• Sat. May 22nd, 2021
அரசியல்

முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இருந்து நீக்கம்!! EPS மற்றும் OPS அதிரடி நடவடிக்கை!!

ByADMIN

May 21, 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இததகவலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர்.

சி ஏ ஏ எதிர்ப்பு போராட்டம்... வண்ணாரப்பேட்டை வர அமைச்சர் நிலோபருக்கு என்ன தயக்கம்? | Minister nilobar kabil reluctance to go to Washermenpet? - Tamil Oneindia

கடந்த ஆட்சியில் நிலோபர் கபில் தொழில் துறை அமைச்சராக இருந்தார். ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் இவருக்கு சீட் வழங்கவில்லை. இவர் கடந்த தேர்தலில் சரியாக செயல்படாத காரணத்தினாலும் கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாலும் இந்த நடவடிக்கை எடுக்க பட்டதாக கூறப்படுகிறது.

EPS, OPS hand out a warning to AIADMK office-bearers on airing views- The New Indian Express

EPS மற்றும் OPS வெளியிட்டுள்ள அறிக்கையில் கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தலைமைச் செயற்குழு உறுப்பினர், மாவட்ட கழக துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், இன்று முதல் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *