நேற்று முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கட்சிக்கு குந்தகம் விளைவித்ததாக கட்சியின் அடிப்படை உறுப்பினரலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவர் மீது மோசடி புகார் ஒன்றை அவர் உதவியாளர் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வணியம்பாடியை சேர்ந்தவர் பிரகாசம். இவர் அதிமுக அரசின் தொழிற் துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபிலிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் DGP அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்களான ஜாபர், இஜ்ரித் கபில், வாஹித் ஆகிய நான்கு பேரின் மீதும் பண மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகாரில் நிலோபர் கபில் தொழிற்துறை அமைச்சராக பணியாற்றிய போது தனது தொழிலாளர் நலத்துறையிலும் வகுப்பு வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 105 பேரிடம் 6 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார் எனவும், பணம் அளிக்கவந்தவர்களை அந்த பணத்தை தன்னிடம் நேரடியாக குடுக்க சொல்லியும் தனது வங்கியில் செலுத்த சொல்லியும் காசோலையாகவும் பெற்று கொண்டதாகவும் கூறினார்.
பணத்தை தன் வங்கியில் பெற்ற பின்பு அந்த பணத்தை நிலோபர் கபிலின் உத்தரவின் பேரிலும் நெருங்கிய உறவினர்களான ஜாபர், இஜ்ரித் கபில், வாஹித், முஹம்மத் ஹாசிம் இவர்களின் பேரிலும் அவர்களின் வங்கிக்கணக்கில் மாற்றி மமாற்றி செலுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பணம் பெற்ற பின்பு கொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி சொன்னபடி வேலை வாங்கி தராமலும் வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் அமைச்சரும் அவரது உறவினர்கள் நான்கு பேரும் அலைக்கழித்து வந்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
வேலை கிடைக்கும் என்று நம்பி பணம் தந்தவர்களை மோசடி செய்து அந்த பணத்தில் 6 கோடி ரூபாயில் இங்கிலாந்தில் உள்ள தன் மூத்த மகள் நரஜீத் பெயரில் சொத்து வங்கியுள்ளதாக பிரகாசம் கூறியுள்ளார். மேலும் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்களிடம் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கும் படியும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படியும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.