![ரேஷன் கார்டு ரேஷன் கார்டு](/wp-content/uploads/2021/06/24THSMARTCARD-696x434.jpg)
வெகு நாளாக நிலுவையில் உள்ள அப்ளிகேஷனை சரிபார்த்து விரைந்து புதிய ரேஷன் கார்டுகளை வழங்க ஆணை பிறப்பித்துள்ளது உணவு ஆணையம்.
ரேஷன் அட்டைகள்:
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான பொருட்களை அதாவது அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை குறைந்த விலைக்கு அதிலும் அரிசியை இலவசமாகவும் நியாய விலை கடைகள் மூலமாக வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 2 கோடியே 13 லட்சம் கார்டுகள் உள்ளது. இதன் மூலமாக 6 கோடியே 84 லட்சம் மக்கள் பயன்படுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 34773 ரேஷன் கடைகள் உண்டு. இதன் மூலமாக மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கி வந்தனர்.
Must Read: தமிழ்நாட்டிலும் +2 தேர்வுகள் ரத்தாகிறதா ?? அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அறிவிப்பு
ரேஷன் கார்டு பயன்பாடு:
![ரேஷன் கார்டு](https://www.thenewsminute.com/sites/default/files/styles/news_detail/public/PDS_TN_1200.jpg?itok=-SLN5epL)
![ரேஷன் கார்டு](https://www.thenewsminute.com/sites/default/files/styles/news_detail/public/PDS_TN_1200.jpg?itok=-SLN5epL)
மளிகை பொருட்கள் மாத்திரம் அல்ல அரசின் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் இந்த ரேஷன் கார்டு அவசியம். குறிப்பாக அரசு வழங்கும் பொங்கல் சாமான்கள், நிவாரண தொகை போன்றவற்றை பெறுவதற்கு கட்டாயம் ரேஷன் கார்டு அவசியம். குறிப்பாக சமீபத்தில் கொரோனா பரவலினால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதற்காக தமிழக அரசு 4000 ரூபாய் அளிக்கும் என்று உறுதி அளித்தது. அதில் ஏற்கனவே 2000 வாங்கிவிட்டது. இதை பெறுவதற்கு ரேஷன் கார்டு அவசியம். மேலும் இந்த மாதம் 13 பொருட்கள் அடங்கிய இலவச மளிகை பொருட்கள் வாங்க ரேஷன் கார்டு வேண்டும்.
புதிய ரேஷன் கார்டு:
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு வாங்க ஆன்லைனில் www.tnpds.gov.in இந்த இணையதளத்தில் பதிய வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இதன் அடிப்படையில் மக்கள் ஆன்லைனில் பதிவு செய்து வருகின்றனர். இதில் என்ன சிக்கல் என்றால் கடந்த ஆண்டு அதாவது 2020ம் ஆண்டு ரேஷன் கார்டு பதிவு செய்தவர்களுக்கு இன்னும் கார்டு வழங்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து மக்கள் அநேகமுறை புகார் தெரிவித்து உள்ளனர். அதற்கான பதிலை தற்போது வெளியிட்டுள்ளனர். இதுபோல ரேஷன் கார்டு வழங்குவதில் தாமதமாவதால் அரசு வழங்கும் சலுகைகளை நிறைய மக்கள் பெறுவதற்கு தடையாக உள்ளது.
புகார் கொடுத்த மக்கள்:
புதிய ரேஷன் கார்டு வேண்டும் என்பவர்கள் ஆன்லைனில் பதிவு செய்ததும் அதை உணவு வழங்கும் அதிகாரிகள், வட்ட வழங்கல் அதிகாரி சரிபார்த்து ரேஷன் கார்டுகளை தருவார். இந்த நடைமுறை கடந்த ஆண்டு முதல் பாதிக்க பட்டதால் மக்கள் புகார் தெரிவிக்க அரபித்துள்ளனர். அநேக புகார்கள் IAS அதிகாரி வாசுகி தலைமைக்கு இந்த புகார்கள் சென்றுள்ளது.
இந்த புகார்களை கவனித்த IAS அதிகாரி இதை உணவு வழங்கல் ஸ்டேட் உணவு ஆணையத்திற்கு புது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். மேலும் இந்த புகார்களின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விரைந்து மக்களுக்கு ரேஷன் வார்டுகள் கொடுக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுளது.
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – times tamil
[…] புது ரேஷன் கார்டு அப்ளை பண்ணியிருக்க… […]