மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியாள் தலைமையில் இன்று நடைபெறும் புதிய கல்விக்கொள்கை ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து தமிழக அரசு. மாநில கல்வி அமைச்சருக்கு அனுமதி மறுக்க பட்டத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநில கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ஏற்கனவே இந்த கூட்டத்தில் மாநில கல்வித்துறை செயலர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் புதியதாக கல்வி அமைச்சராக பதவியேற்ற மகேஷ் பொய்யாமொழி இக்கூட்டத்தில் தான் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். அனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
புதிய கல்விக்கொள்கையில் 3, 5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு, மறைமுகமாக ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழிகளை மத்திய அரசு திணிப்பிப்பதாகவும், மும்மொழிக் கொள்ளைகளை தமிழக அரசு எதிர்க்கிறது. இவற்றிற்கு கருத்து தெரிவிக்க புதிய கல்விக்கொள்கை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி கேட்டிருந்தேன். அதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. அதனால் இக்கூட்டத்தை தமிழ அரசு புறக்கணிப்பதாக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.