• Sat. May 22nd, 2021
செய்திகள்

ஜகமே தந்திரம் “நேத்து” வீடியோ பாடல்!! கடைசி வரை முத்தம் குடுக்க போராடும் தனுஷ்!!

ByADMIN

May 22, 2021

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடிக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரீலீஸ் க்கு தயாராகி கொண்டு இருக்கிறது. வருகிற ஜூன் மாதம் 18 தேதி OTT தளத்தில் இப்படம் வெளியிடப்பட இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் நேத்து என்ற வீடியோ பாடல் வெளியாகி இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

ஹிட் அடித்த பாடல்கள்:

ஏற்கனவே இந்த படத்தின் ரகிட ரகிட என்ற பாடலும் பஜ்ஜி என்ற பாடலும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பெரிய ஹிட் அடித்தது. ரகிட ரகிட என்ற பாடலை தனுஷ் படி இருந்தார். அதன் பின் கர்ணன் படத்திலும் அவர் ஒரு பாடலை பாடியிருந்தார். அந்த பாடலும் செம ஹிட்டானது. இந்நிலையில் இன்று வெளியான நேத்து என்ற பாடலும் அவர் குரலில் வெளியாகி இருக்கிறது.

பாட்டுல என்னதான்பா இருக்கு:

“நேத்து ஓரக்கண்ணில் நா உன்ன பார்த்தேன்” என்று ஆரம்பிக்கும் பாடலில் தூரத்திலிருந்து ஐஸ்வர்யா பார்க்கும் தனுஷ் படும் பாடலாக ஆரம்பிக்கிறது. பாடலின் இடையிருந்தே தனுஷ் ஐஸ்வர்யாவுக்கு முத்தம் குடுக்க ட்ரை பண்ணுவார். கடைசி வரைக்கும் ட்ரை பண்ணிட்டே இருப்பார் . கடைசியில் முத்தம் குடுத்தாரா இல்லையா என்று பாடல் பார்த்து தெரிச்சுக்கோங்க.

ரசிகர்கள் கொண்டாட்டம்:

கடைசியா தனுஷ் நடித்த கர்ணன் படம் பயங்கர வெற்றி பெற்றது. இதனால் ஜகமே தந்திரம் படத்தை ஆவலுடன் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் படம் OTT தளத்தில் வெளியாகிறது. திரை அரங்கில் சென்று படத்தை கொண்டாட முடியாவிட்டாலும் தன்னுடைய ஹீரோ படம் லோக்கடவுன் நாட்களில் ரிலீஸ் ஆவது ரசிகர்களுக்கு சந்தோசம் தான். இத்திரைப்படம் வருகிற ஜூன் 18 அன்று நெடபிளிஸ் OTT தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

Video:


ADMIN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *