நாடு முழுவதும் சைக்கிளுக்கு மாறிய அதிசயம் : எப்படி மாறியது இந்த நாடு ?

why is cycling so popular in the netherlands ? Details in Tamil

0
42
Facebook
Twitter
WhatsApp
Telegram

இன்றைய காலக்கட்டத்தில் சைக்கிலிருந்து பைக், அதிலிருந்து காருக்கு மாறிவரும் உலக நாடுகள் மத்தயில் மீண்டும் அனைவரும் சைக்கிளுக்கு மாறிய நாடு எது தெரியுமா? அதன் விவரத்தை பார்ப்போம் நண்பர்களே. பெட்ரோல் விலை கிடுகிடுவென குடிகொண்டிருக்கும் வேளையில் மக்கள் அனைவரும் கஷ்டப்பட்டு பெட்ரோல் போடவேண்டிய நிலையில் உள்ளோம். இந்த வாகனங்களின் புகையால் ஓசோன் வளிமண்டலத்தில் இடைவெளி அதிகரித்துக்கொண்டே வருகிறது. டெல்லி போன்ற நகரங்களில் காற்று மாசு பட்டு சுவாசிக்கும் காற்றை கூட விலைகொடுத்து வாங்கும் நிலைமை தான் அங்கே உள்ளது.

Bike helmets are less effective than we think

சைக்கிள் தேசம் :

நாட்டில் வசிக்கும் ஒன்றரை கோடி மக்களுக்கு 2 கோடி மிதிவண்டிகள் கொண்ட ஒரே நாடு நெதர்லாந்து.
அதிலும் அதன் தலை நகரமான ஆம்ஸ்டர்டாமில் 400 கிலோமீட்டர் நீளத்தில் சைக்கிளுக்கென்றே சாலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கே வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமில்லாமல் வேலைக்கு, ஸ்கூல் மற்றும் அனைத்திற்கும் மிதிவண்டி மட்டுமே பயன்படுத்துகிறார்கள். “டச்சு சைக்ளிங்” திட்டத்தின் மூலம் இந்த ஒரு ஆண்டில் மட்டும் 2 லட்சம் மக்கள் காரிலிருந்து சைக்கிளுக்கு மாற்றியுள்ளனர். நெதர்லாந்தை சைக்கிள் தேசம் அழைக்கலாம்.

ஆரம்பகால மாற்றம் :

இதில் மாற்றம் நிகழ்ந்தது எங்கே என்றால் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அந்த நாட்டிலும் 1950 – 60 களில் கார் வாங்கி குவித்தனர். 1970 களில் கார்களின் எண்ணிக்கை கூடியதால் 3000 க்கும் மேற்பட்டோர் விபத்தில் இறந்தனர். அதில் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 400 ஆகும். அதிர்ந்து போன அரசு ஒரு திட்டத்தை தீட்டியது.

Why it makes sense to bike without a helmet — Howie Chong : Howie Chong

1st டெஸ்ட்: ENG VS NZ – அறிமுக போட்டியில் கான்வே அசத்தல் சதம்!! – Click Here

இவர்தான் முதல் காரணம் :

இது போன்ற விபத்தில் குழந்தைதையை இழந்த பத்திரிகையாளர் விக் லாங்கன்ஹாப் என்பவர் தனது நாளிதழில் “மக்கள் தொகை குறைந்த நாட்டில் இவ்வளவு விபத்தா?” என பதிவிட்டதோடு STOPDE KINDERMOOD என்கிற குழந்தை கொலையை தவிருங்கள் என்ற அமைப்பை உருவாக்கினார். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட எண்ணெய் போரினால் விளக்கிற்கு கூட எண்ணெய் இல்லாத நிலையை பயன்படுத்தி சைக்கிள் உபயோக படுத்த அறிவுறுத்தப்பட்டது.

சைக்கிளின் பயன்களை புரிந்த மக்கள் :

இதன் மூலம் சைக்கிள் தேசமாக மாறிய நெதர்லாந்து, சைக்கிள் ஓட்டுவதால் தசைகள் வலுப்பெறும், இதயம் நல்ல முறையில் இயங்கும், மற்றும் சர்க்கரை, கொழுப்புகள் குறைக்கப்படுவதோடு, புற்றுநோய் போன்ற நோய்கள் வரும் வாய்ப்புகள் குறைவு என்றும், செலவுகள் குறைவதோடு மருத்துவ செலவுகளும் குறைகிறது என்கிற பிரச்சாரத்தை கையில் எடுத்தது. இதன் பலனாக அனைவரும் மிதிவண்டி பயன்படுத்துவதோடு குழந்தைகள் நடப்பதற்கு முன்னே “bakfits ” சிறப்பு இருக்கைகள் கொண்ட வண்டியும், அதிலும் 90% மாணவர்கள் பள்ளிக்கு மிதிவண்டியில் தான் சென்று வருகின்றனர். எனவே இன்று உலகிற்கே முன்மாதிரியான நெதர்லாந்து ” சைக்கிள் தேசம் ” என்று சிறப்பு பெயர் பெற்று வருவது குறிப்பிட தக்கது.

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here