![1212](/wp-content/uploads/2021/06/1212-696x392.jpg)
இன்றைய சூழலில் வேலைக்கு போகும் அவசர வாழ்க்கையில் மிஷின் போல ஓடிக்கொண்டிருக்கின்றனர். கிளம்பும் அவசரத்தில் சரியாக சாப்பிடக்கூட செய்வதில்லை. கேட்டால் டைம் இல்லன்னு சொல்றாங்க. அவர்களுக்காகவே குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய துரித உணவாக நூடுல்ஸ் பார்க்கப்படுகிறது. நெஸ்ட்லே நிறுவனத்தால் தயாரிக்க படும் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் இரண்டே நிமிடத்தில் நூடுல்ஸ் ரெடி பண்ணலாம் என்கிற அந்த விளம்பரம் பட்டி தொட்டி வரை மேகி நூடுல்ஸை கொண்டு சேர்த்தது. மேகி நூடுல்ஸை தெரியாத கிராமம் கூட கிட்டத்தட்ட இருக்காது.
![How To Become A Nestle Food Distributor In Nigeria – Wealth Result](https://www.wealthresult.com/wp-content/uploads/2017/09/Nestle-Food.jpg)
![How To Become A Nestle Food Distributor In Nigeria – Wealth Result](https://www.wealthresult.com/wp-content/uploads/2017/09/Nestle-Food.jpg)
நெஸ்ட்லே திடீர் அறிவிப்பு:
இந்நிலையில் மேகி நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனம் நெஸ்ட்லே ஒரு அறிவிப்பை தெரிவித்தது. அது என்னவென்றால் தங்களது தயாரிப்புகளில் அறுபது சதவிகிதம் பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை என்று தெரிவித்துள்ளது. இது நெஸ்ட்லே பொருட்கள் விரும்பிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. நெஸ்ட்லே நிறுவனம் நூடுல்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் மற்றும் சத்துப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிக்கை வெளியிட்ட அதிர்ச்சி:
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வணிக இதழான ” பைனான்சியம் டைம்ஸ் ” வெளியிட தகவலின்படி நெஸ்ட்லே தயாரிப்புகளில் 37 சதவீதம் பொருட்கள் ஆஸ்திரேலிய ஆரோக்கிய தரம் மதிப்பீட்டில் 3.5 சதவீதத்திற்கும் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது. அதன் படி 3.5 சதவீதத்துக்கும் குறைவான பொருட்கள் ஆரோக்கிய எல்லைகளுக்குள் வராது எனவும் உலகில் உள்ள பலதரப்பட்ட நிறுவனங்கள் 70 சதவீதம் ஆரோக்கிய எல்லைக்குள் வரவில்லை என தெரிவித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
![Nestle 'unhealthy' food controversy: Looking back at the Maggi Noodles crisis in India - Business News](https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/story/202106/Screenshot_2021-06-02_at_3.49._1200x768.png?H_NZYDLJjVdGRHcEdE.9lcWDTd8jHhBt&size=770:433)
![Nestle 'unhealthy' food controversy: Looking back at the Maggi Noodles crisis in India - Business News](https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/story/202106/Screenshot_2021-06-02_at_3.49._1200x768.png?H_NZYDLJjVdGRHcEdE.9lcWDTd8jHhBt&size=770:433)
நெஸ்ட்லேவின் விளக்கம் :
இதுகுறித்து தகவல் தெரிவித்த நெஸ்ட்லே நிறுவனம் சென்ற 7 வருடங்களாக சோடியம் அளவை 14 முதல் 17 சதவீதம் வரை குறைத்துள்ளோம் எனவும் மக்களுக்கு தரமான தயாரிப்புகளை கொடுக்கவே நாங்கள் முயன்று வருகிறோம். குழந்தை மற்றும் குடும்பத்திற்கு பல தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறோம் மற்றும் அவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையே கொடுப்போம் என தெரிவித்துள்ளது .
மனிதர்களால் 150 வயதுவரை வாழமுடியும் – விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு
நெஸ்ட்லே இந்தியா பதில்:
நெஸ்ட்லே இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் மக்களுக்கு நல்ல தரமான பொருட்களை கொடுப்பதுதான் விருப்பம் எனவும் மேகி நூடுல்ஸ் இந்தியாவில் போனமுறை தடை செய்யப்பட்டதுக்கு காரீயம் மற்றும் சோடியம் குளுக்கோமேட் விவரங்களை தவறாக தெரிவித்திருந்ததாலும் தடை செய்யப்பட்டது எனவும் பின்னர் அதன் தடை விடுவிக்கப்பட்டதாகவும் கூறினார். இந்நிலையில் நெஸ்ட்லே நிறுவனமே தங்களது பொருட்களை இவ்வாறு கூறியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், தயக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – Times Tamil