தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றவர் திமுக எம்.எல்.ஏ எழிலன் அவர்கள் அவர். சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் ஒருமையில் பேசியது பரபரப்பாக பேசப்படுகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் கட்ட அலை பரவி அதிகளவில் பாதிப்பை உருவாகியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அரசோடு அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது . இதில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ எழிலன் அவர்களும் பங்கேற்றார். அவர் போன கொரோனா முதல் அலையின் பொது 3000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது .
கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்காக கீழ்தளத்தில் காத்திருந்தார். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட காவல் உதவியாளர் கோடி லிங்கம் என்பவர் அவரை ” யார் நீ!! தள்ளிப்போய் நில் !! என்று ஒருமையில் பேசியுள்ளார். இதை கேட்ட திமுகவினர் சத்தம் போடவே அந்த காவல் உதவியாளர் எனக்குஅவர் யார் என்பது தெரியமால் கூறிவிட்டேன் !! என மன்னிப்பு கேட்டுள்ளார்.
திமுக எம்.எல்.ஏ என்றால் கரைவேஸ்டி கட்டிருப்பாங்க !! இவர் பேண்ட் சட்டை போட்டு நின்னதால எனக்கு அவர் திமுக எம்.எல்.ஏ என தெரியவில்லை என கூறியுள்ளார். இதற்கு பதில் கூறிய திமுக எம்.எல்.ஏ எழிலன் அவர்கள் யாராக இருந்தாலும் மரியாதை குடுத்து பேசுங்க !! முக்கியமா சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சுக்கோங்க !! என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
பழைய ஆட்சிக்கு விசுவாசியாக இருப்பவர்கள் இப்படி செய்றங்கனு திமுகவினர் கூறிச்சென்றனர் .