அட்ராசக்க மூன்று அதிரடி திட்டம் – தமிழக அரசு அறிவிப்பு!!

0
15
Facebook
Twitter
WhatsApp
Telegram

ஜூன் 3 கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு மூன்று அதிரடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

கலைஞர் பிறந்தநாள்:

திமுக சமீபத்தில் புதிய அரசாக பதவியேற்றது. அதிலிருந்து பல்வேறு திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. இந்நிலையில் நாளைய தினம் ஜூன் 3 தேதி கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாள். இந்த நாளில் சில புதிய அறிவுப்புகள் வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்ததுதான். நாளையத்தினம் முதல்வர் மு க ஸ்டாலின் சில திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதில் 13 பொருட்கள் அடங்கிய இலவச மளிகை பொருட்கள் மற்றும் கொரோனா நிவாரண நிதி இரண்டாவது தொகை 2000 கொடுப்பதை தொடங்கி வைக்கிறார். மேலும் மூன்று அதிரடி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

Must Read: உங்க ஊர்ல அடிக்கடி பவர் கட் ஆகுதா இது தான் காரணம் அமைச்சர் விளக்கம்!!

பல்நோக்கு மருத்துவமனை:

தமிழக அரசு

முதல் அறிவிப்பாக தென் சென்னை பகுதியில் 300 கோடி மதிப்பீட்டில் ஒரு பல்நோக்கு மருத்துவமனை கொண்டுவரப்படும் என்று அறிவிப்பை முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிகிறது. ஏற்கனவே சென்னையில் அநேக அரசு மருத்துவமைகள் உள்ளது. ஓமந்தூரார் பகுதியில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டது. தென் சென்னை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை புதிதாக பதியேற்ற அரசாங்கம் நிறைவேற்ற உள்ளது.

மிகப்பெரிய நூலகம்:

தமிழக அரசு

இரண்டாவது அறிவிப்பாக மதுரையில் 60 கோடி செலவில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கிறது. மதுரையை பொறுத்த வரை பெரிய நூலகம் எதுவும் இல்லை. மேலும் மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாக இது இருந்து வந்தது. இது மதுரையின் மையப்பகுதியில் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

Must Read: தமிழ்நாட்டிலும் +2 தேர்வுகள் ரத்தாகிறதா ?? அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அறிவிப்பு

நெல் கிடங்கு:

தமிழக அரசு

மூன்றாவது முக்கிய அறிவிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 11 இடங்களில் 16000 டன் நெல்களை சேமித்து வைக்கும் குடவுன்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதனுடைய மொத்த செலவு 24 கோடி ரூபாய். டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை நெல் சேமிப்பு மிக முக்கியம் ஆகும். இவை சரிவர செயல்படவில்லை என்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் பல இடங்களில் நெல் சேமித்து வைக்கும் குடவுன்கள் சரியாக பராமரிப்பு இல்லாததால் மழைக்காலங்களில் நெல் முழுவதும் வீணாவது அடிக்கடி நடக்கிறது. இதை மனதில் வைத்து 24 கோடி செலவில் புதிய நெல் குடவுன்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இது போன்ற செய்திகளுக்கு எங்களது இணையதளத்தை Follow செய்யுங்கள் – times tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here